நடிகர் தனுஷ் இயக்கி நடித்த இட்லி கடை படம் நாளை ரிலீஸ் ஆக உள்ளது. டான் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்த படத்தில் நித்யா மேனன் கதாநாயகியாக நடித்திருக்கிறார். ஏற்கனவே திருச்சிற்றம்பலம் படத்தில் தனுஷ் – நித்யா மேனன் ஜோடிக்கு ரசிகர்களிடம் பெரிய வரவேற்பு கிடைத்தது. மேலும் திருச்சிற்றம்பலம் படத்தில் நடித்ததற்காக நித்யா மேனனுக்கு சிறந்த நடிகை தேசிய விருதும் கிடைத்தது.
அதனால் தனுஷ் – நித்யா மேனன் ஜோடி மீண்டும் 2வது முறையாக இட்லி கடை படத்தில் இணைந்திருப்பது ரசிகர்களிடம் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. மேலும் இந்த படத்தில் ராஜ்கிரண் சத்யராஜ் பார்த்திபன் அருண் விஜய் ஷாலினி பாண்டே உள்ளிட்டோர் பல முக்கிய கேரக்டர்களில் நடித்திருக்கின்றனர்.
இட்லி கடை படத்துக்கு ஜி வி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். மேலும் இட்லி கடை படத்தின் ஹீரோ இட்லி கடை மற்றும் வில்லன் கேரக்டர்களில் நடித்துள்ள அருண் விஜய்தான் என்று ஏற்கனவே பிரமோஷன் நிகழ்ச்சிகளில் பேசிய நடிகர் தனுஷ் குறிப்பிட்டு கூறியிருந்தார். என்னை அறிந்தால் படத்துக்கு பிறகு இந்த படத்தில் அருண்விஜய் மீண்டும் வில்லனாக நடித்திருக்கிறார் என்பது கவனிக்கத்தக்கது.
இந்நிலையில் இட்லி கடை படத்தில் நடித்தது குறித்து நடிகர் அருண் விஜய் ஒரு நேர்காணலில் கூறியதாவது, இட்லி கடை படப்பிடிப்பு மதுரையில்தான் அதிக நாட்கள் நடந்தது. நாங்கள் தங்கி இருந்த இடத்தில் உடற்பயிற்சிக்கான வசதிகள் இல்லை. அதனால் சென்னையில் இருந்து உடற்பயிற்சி கருவிகளை அங்கு கொண்டு சென்று தினமும் பயன்படுத்தினோம். தினமும் காலை 7 மணிக்கு எழுந்து உடற்பயிற்சிகள் செய்துவிட்டு படப்பிடிப்புக்கு கிளம்பி விடுவோம்.
படப்பிடிப்பு முடிந்ததும் மதுரை முழுக்க நல்ல நல்ல ரோட்டுக்கடைகளை கண்டுபிடித்து தினமும் சாப்பிட்டோம். தனுஷ் சைவ உணவுகள் தான் சாப்பிடுவார். எனக்கு விதவிதமான உணவுகளை வாங்கிக் கொடுப்பார். நாம் வேலை பார்ப்பதே சாப்பிடுவதற்கு தான் என்பதை தெளிவாக புரிந்துக்கொண்டு சாப்பாடு நேரத்தில் அனைவருக்கும் பிரேக் கொடுத்து விடுவார்.
இட்லி கடை படப்பிடிப்பு தளத்தில் இயக்குனராக நடிகராக தனுஷின் உழைப்பை பார்த்து நான் இன்னும் அதிக வேகமாக ஓட வேண்டும் என்பதை கற்றுக் கொண்டேன் என்று அருண் விஜய் அந்த நேர்காணலில் வெளிப்படையாக கூறியிருக்கிறார். படத்தின் பெயரும் இட்லி கடை என்பதால் சக நடிகர்களை படக்குழுவினரை விதவிதமாக சாப்பிட வைத்து இயக்குனர் தனுஷ் திருப்தியாக வேலை வாங்கியிருக்கிறார் போல என்று ரசிகர்கள் கலாய்த்து கமெண்ட் செய்துள்ளனர்.





