- Advertisement -
Homeபொழுதுபோக்குபராசக்தி திரைப்படத்தில் 90ஸ் கிட்ஸ்களின் அந்த ஆதர்சன நாயகன் நடிக்கிறாரா... அட நம்பவே முடியலையேப்பா... ரசிகர்கள்...

பராசக்தி திரைப்படத்தில் 90ஸ் கிட்ஸ்களின் அந்த ஆதர்சன நாயகன் நடிக்கிறாரா… அட நம்பவே முடியலையேப்பா… ரசிகர்கள் ஆச்சரியப்படும் அளவுக்கு வந்த புதிய தகவல்…

- Advertisement -

சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் மதராசி திரைப்படம் வரும் ஐந்தாம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இதற்கான பணிகளை தற்போது படக்குழு முடுக்கி விட்டுள்ளது. ஏ ஆர் முருகதாஸ் இயக்கியிருக்கும் இந்த திரைப்படத்தில் ருக்மணி வசந்த், வித்யூத் ஜமால், விக்ராந்த், பிஜுமேனன் உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள். அனிருத் இசையமைத்துள்ளார்.

அதாவது வட மாநிலத்தைச் சேர்ந்த ஒரு கும்பலுக்கும், சிறப்பு படைப்பிரிவினருக்கும் இடையே நடக்கும் மோதல் தான் இந்த திரைப்படத்தின் கதை என்று கூறப்படுகிறது. காதல் கலந்த ஆக்சன் திரைப்படமாக இது இருக்கும் என்றும், திரைக்கதையில் கஜினி, ஆக்ஷனில் துப்பாக்கி போன்று எடுக்கப்பட்டிருப்பதாகவும் முருகதாஸ் தெரிவித்திருந்தார்.

- Advertisement -

இதன் இசை வெளியீட்டு விழா வரும் 24ம் தேதி பிரம்மாண்டமான முறையில் நடைபெற இருக்கிறதாம். சென்னை சாய்ராம் கல்லூரியில் இந்த விழா நடைபெற இருப்பதாக சொல்கிறார்கள். இது ஒரு பக்கம் இருக்க தனது பராசக்தி திரைப்படத்தின் மீது மீண்டும் கவனம் செலுத்த ஆரம்பித்து விட்டார் சிவகார்த்திகேயன். நடுவே இதன் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.

தயாரிப்பு நிறுவனத்திற்கு ஏற்பட்ட பிரச்சனையே அதன் காரணம் என்று கூறப்பட்டது. தற்போது அந்த சிக்கல்கள் தீர்ந்து இருப்பதால், படபிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஏற்கனவே சென்னை காரைக்குடி சிதம்பரம் மற்றும் இலங்கையில் சூட்டிங் நடத்தப்பட்டது. பின்னர் பொள்ளாச்சியை தொடர்ந்து தற்போது சென்னைக்கு மீண்டும் படக்குழு திரும்பி இருப்பதாக சொல்லப்படுகிறது.

- Advertisement -

இந்த திரைப்படத்தில் ஏராளமான நட்சத்திரங்களை நடிக்க வைத்திருக்கிறார் இயக்குனர் சுதா கொங்கரா. வில்லனாக ரவி மோகன் வர, ஸ்ரீ லீலா, அதர்வா, பிரிதிவிராஜ் உள்ளிட்டோரும் இடம்பெற்று இருக்கிறார்கள். பீரியட் திரைப்படமாக எடுக்கப்படும் இதில் தெலுங்கு நடிகர் ராணாவுக்கும் முக்கிய கதாபாத்திரம் கொடுக்கப்பட்டிருப்பதாக சொல்லப்படுகிறது.

இப்படியான சூழலில் 90ஸ் கிட்ஸ்களின் முக்கியமான நடிகரான அப்பாஸ் பராசக்தி திரைப்படத்தில் நடிக்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. திரைத்துறையை விட்டு விலகி இருக்கும் அவர் தற்போது ஜிவி பிரகாஷ் திரைப்படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுக்க இருக்கிறார். இப்படியான நிலையில்தான் அவருக்கு சிவகார்த்திகேயன் திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பும் கிடைத்திருப்பதாக பேசுகிறார்கள். பொங்கலுக்கு பராசக்தி திரைப்படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டு இருக்கிறார்கள்.

- Advertisement -

சற்று முன்