தமிழ் சினிமாவில் 80களில் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர் சரிதா. கே. பாலசந்தர் தெலுங்கில் இயக்கிய மரோசரித்திரா படத்தின் மூலம் திரையுலகுக்கு அறிமுகமானார். பாலசந்தர் அறிமுகப்படுத்தும் ஒருவர் சோடை போகமாட்டார் என்பதை நிரூபிக்கும் விதத்தில் முதல் படத்திலேயே சரிதா தனது அபார நடிப்பால் ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்தார்.
இதனையடுத்து அவருக்கு பட வாய்ப்புகள் குவிந்தன. அப்படி தப்புதாளங்கள், அவள் அப்படித்தான், வண்டிச்சக்கரம், மௌன கீதங்கள், நெற்றிக்கண்,தண்ணீர் தண்ணீர் உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். ஹீரோயின் என்றால் வெள்ளையாக இருக்க வேண்டும் என்ற டெம்ப்ளேட்டை உடைத்து கருப்பாக இருந்தாலும் வெல்லலாம் என்பதை கோலிவுட்டுக்கு சரிதா நிரூபித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. கடைசியாக அவர் தமிழில் பிரண்ட்ஸ், ஜூலி கண்பதி, ஆல்பம் ஆகிய படங்களில் நடித்தார்.
இந்நிலையில் சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் மாவீரன் படத்தின் மூலம் ரீ எண்ட்ரி கொடுத்தார் சரிதா. அந்தப் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு தாயாக நடித்திருந்தார். அவரது நடிப்பு பரவலான வரவேற்பை பெற்றிருக்கிறது.மேலும் அவர் தொடர்ந்து நடிக்க வேண்டும் என்றும் ரசிகர்கள் கோரிக்கை வைக்க ஆரம்பித்திருக்கின்றனர்.
இதற்கிடையே மாவீரன் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய சரிதா, மாவீரன் ஷூட்டிங்கின்போது சிவகார்த்திகேயன் நடந்துகொண்டதை பார்த்தபோது எனக்கு ரஜினிகாந்த்தான் நியாபகத்திற்கு வந்தார் என பேசினார். அதனையடுத்து அடுத்த சூப்பர் ஸ்டார் சிவகார்த்திகேயன் என்பதை சரிதா மறைமுகமாக சொல்கிறாரா என பலர் கேள்வி எழுப்பினர்.
இந்தச் சூழலில் இதுகுறித்து பேசியிருக்கும் பயில்வான் ரங்கநாதன், “சிவகார்த்திகேயனை பார்க்கும்போது ரஜினியை பார்ப்பதுபோல் இருந்ததாக சரிதா கூறியது ஐஸ்ஸோ ஐஸ். அடுத்தப் படத்திலும் தனக்கு வாய்ப்பு வர வேண்டும் என சரிதா பேசிய பேச்சாக இருக்கும் அது. ரஜினி எளிமையானவர். அதேபோல் சிவகார்த்திகேயனும் எளிமையானவர்தான். சரிதா தெலுங்குக்காரர் என்பதால் அப்படி சொல்லியிருக்கலாம்.
சரிதாவுக்கு மொத்தம் நான்கு கணவர்கள். அவர் சினிமாவுக்குள் வருவதற்கு முன்னதாகவே ஆந்திராவில் ஒருவரை திருமணம் செய்துகொண்டார். ஆனால் அவரை விட்டுவிட்டு இங்கு வந்தார். மலையூர் மம்பட்டியானில் நடித்தபோது தியாகராஜனை காதலித்தார். அதன் பிறகு மலையாள நடிகர் முகேஷ் காதலித்து திருமணம் செய்து குழந்தை பெற்றுக்கொண்டார். அவர் சிறந்த நடிகை என்பதை மறுக்க முடியாது. ஆனால் சிவகார்த்திகேயனை ரஜினி என்று சொல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது. அது கண்டிக்கத்தக்க விஷயம்” என்றார்.





