- Advertisement -
Homeபொழுதுபோக்குபொங்கலன்று அடுத்த படத்திற்கான முக்கிய அறிவிப்பை வெளியிடும் சன் பிக்சர்ஸ்... திரையரங்குகளிலும் வீடியோ வெளியாவதுதான் இதில்...

பொங்கலன்று அடுத்த படத்திற்கான முக்கிய அறிவிப்பை வெளியிடும் சன் பிக்சர்ஸ்… திரையரங்குகளிலும் வீடியோ வெளியாவதுதான் இதில் ஆச்சரியம்… என்னங்க சொல்றீங்க….

- Advertisement -

தமிழ் சினிமாவில் மிக முக்கிய தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்று சன் பிக்சர்ஸ். இதன் நிறுவனத்தின் கீழ் வெளியாகும் பெரும்பாலான திரைப்படங்கள் வெற்றி மேல் வெற்றி குவித்து வருகின்றன. ரஜினிகாந்த் நடித்த எந்திரன் திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தான் தயாரித்திருந்தது.

 

- Advertisement -

மிகப்பெரும் பொருட்செலவில் இந்த திரைப்படத்தை சங்கர் இயக்கியிருந்தார். அதற்கு ஏற்றது போலவே படமும் பிரம்மாண்டமாக அமைந்திருந்தது. குறிப்பாக கிளைமாக்ஸ் காட்சியான கடைசி 20 நிமிடங்கள் தமிழ் சினிமா மட்டுமல்ல இந்திய சினிமா ரசிகர்களுக்கும் புதுவித அனுபவத்தை கொடுத்தது. சமீபகாலமாக ரஜினி திரைப்படங்களை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

 

- Advertisement -

ரஜினிகாந்த் நடிப்பில் அண்ணாத்த மற்றும் ஜெயிலர் ஆகிய இரண்டு திரைப்படங்களையும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தான் தயாரித்திருந்தது. இதில் அண்ணாத்த திரைப்படம் சிறுத்தை சிவா இயக்கத்தில் வெளியாகி படுதோல்வியை சந்தித்தது. அதற்கு விமர்சனங்கள் எதிர்பார்த்த அளவு கிடைக்கவில்லை. குறிப்பாக திரைக்கதையில் சிறுத்தை சிவா சொதப்பிவிட்டதாக பலரும் கருத்து தெரிவித்தனர்.

 

அதற்கு முன்னதாக ஏற்கனவே தர்பார் திரைப்படமும் ரஜினிகாந்த்துக்கு தோல்வி படமாக தான் அமைந்திருந்தது. இந்த சமயத்தில் தான் ரஜினியை வைத்து மீண்டும், தயாரிக்க முடிவு செய்த சன் பிக்சர்ஸ் நிறுவனம் ஜெயிலர் படத்தை எடுத்தது. நெல்சன் இயக்கத்தில் கடந்த 2023 ஆம் ஆண்டு வெளியான இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.

 

ரஜினிக்கே உண்டான மாஸ் காட்சிகளை அந்த திரைப்படத்தில் வைத்து பாராட்டைப் பெற்றிருந்தார் இயக்குனர் நெல்சன். கிட்டத்தட்ட 700 கோடி ரூபாய்க்கு மேல் வசூலை அந்த திரைப்படம் குவித்தது. இதனால் மகிழ்ச்சி அடைந்த சன் பிக்சர்ஸ் நிறுவனம் ரஜினிகாந்த் நெல்சன் அனிருத் ஆகியோருக்கு பரிசு அளித்து கௌரவித்தது. இந்த நிலையில் அடுத்ததாக ரஜினிகாந்தை வைத்து கூலி திரைப்படத்தையும் சன் பிக்சர்ஸ் நிறுவனமே தயாரித்து வருகிறது.

 

லோகேஷ் கனகராஜ் இந்த திரைப்படத்தை இயக்கி வருகிறார். இப்படியான சூழலில் தான் பொங்கலன்று முக்கியமான அறிவிப்பு வெளியாகும் என்று சன் பிக்சர்ஸ் நிறுவனம் கூறி இருக்கிறது. தி சூப்பர் சகா என்னும் பெயரில் அறிவிப்பைக் கூறியிருக்கும் சன் பிக்சர்ஸ் நிறுவனம், சென்னை திருநெல்வேலி உள்ளிட்ட நகரங்களில் உள்ள குறிப்பிட்ட திரையரங்குகளில் அறிவிப்பு குறித்த வீடியோ நேரடியாக ஒளிபரப்பப்படும் என தெரிவித்திருக்கிறது. அனேகமாக இது ஜெயிலர் திரைப்படத்தின் இரண்டாம் பாகமாக தான் இருக்கும் என்று பலரும் கூறி வருகிறார்கள் அண்மையில் இதற்கான அறிவிப்பு வீடியோவை நெல்சன் எடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சற்று முன்