தமிழ் சினிமாவில் புன்னகை அரசி என முதலில் அழைக்கப்பட்டவர் நடிகை கே ஆர் விஜயா. அவருக்கு பிறகு புன்னகை அரசி என்ற பட்டப் பெயர் பெற்றவர் நடிகை சினேகா. இவர் சுசி கணேஷ் இயக்கத்தில் பிரசாந்துக்கு ஜோடியாக விரும்புகிறேன் என்ற படத்தில் நடித்து அறிமுகம் ஆனார்.
தொடர்ந்து ஆனந்தம், பம்மல் கே சம்பந்தம், புதுப்பேட்டை போன்ற படங்களில் நடித்த சினேகா ஆட்டோகிராப் படம் மூலம் மிகப்பெரிய அளவில் ரசிகர்களின் மனம் கவர்ந்த நாயகியாக மாறினார். அதன் பிறகு கமல் நடித்த வசூல்ராஜா எம்பிபிஎஸ், விஜய் நடித்த வசீகரா என முன்னணி நடிகர்களுடன் நடித்தார்.
பார்த்திபன் கனவு, போஸ், ஏப்ரல் மாதத்தில் போன்ற படங்களில் நடிகர் ஸ்ரீகாந்துடன் சினேகா நடித்த போது, இருவருக்கும் காதல் என்ற தகவல் பரவி கோலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால் ஒரு கட்டத்தில் நடிகர் பிரசன்னாவை காதலித்து சினேகா திருமணம் செய்து கொண்டார் இப்போது அந்த தம்பதிக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர். இப்போதும் நடிகை சினேகா தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார்.
ஆனால் குறிப்பிட்ட கேரக்டர்களை தேர்வு செய்து நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. டிவி சேனல்களில் ரியாலிட்டி ஷோகளில் நடுவராக தொடர்ந்து பங்கேற்று வருவதும் குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் வெளியான தி கோட் படத்தில் சினேகா நடிகர் விஜய்க்கு ஜோடியாக நடித்திருந்தார் அதாவது அப்பா மகன் என இரண்டு வேடங்களில் விஜய் நடித்த நிலையில், அப்பா கேரக்டருக்கு ஜோடியாக சினேகா நடித்திருந்தார். அவரது நடிப்பும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பலத்த பாராட்டையும் பெற்றுள்ளது.
கடந்த 2023ம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளிவந்த வாரிசு என்ற படத்தில் நடிகர் விஜய்க்கு அண்ணியாக நடிக்கும் வாய்ப்பு சினேகாவுக்கு வந்தது. அதாவது வாரிசு படத்தில் விஜய்க்கு இரண்டு அண்ணன்கள் நடித்த நிலையில் அதில் ஒரு அண்ணனுக்கு ஜோடியாக நடிக்க வேண்டி அண்ணி கேரக்டரில் சினேகாவை அழைத்தனர். ஆனால் அந்த கேரக்டரில் நடிக்க அவர் மறுத்துவிட்டார். பிறகு அந்த கேரக்டரில் நடிகை சங்கீதா நடித்தார்.
இப்போது வெங்கட்பிரபு இயக்கத்தில் தி கோட் படத்தில் விஜய்க்கு ஜோடியாக சினேகா நடித்துள்ளார். இதுகுறித்து சினேகா கூறுகையில், எனக்குள் சில விஷயங்கள் தோன்றும். அப்போது எவ்வளவு பெரிய விஷயமாக இருந்தாலும் அதை உடனே மறுத்து விடுவேன். அப்படிதான் அந்த அண்ணி கேரக்டர் படத்தையும் மறுத்தேன். அதன்பிறகு தி கோட் பட வாய்ப்பு வந்தது. கிட்டத்தட்ட 23 ஆண்டுகளுக்கு பிறகு விஜயுடன் சேர்ந்து நடித்திருக்கிறேன் என்று கூறியிருக்கிறார்.





