- Advertisement -
Homeபொழுதுபோக்குவெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகும் வாடிவாசல் - மாஸ் ஆக வந்த அப்பேட் …...

வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகும் வாடிவாசல் – மாஸ் ஆக வந்த அப்பேட் … போடு வெடிய!

- Advertisement -

இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்த கங்குவா பலத்த ஏமாற்றத்தை தந்த நிலையில், கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்த ரெட்ரோ அடுத்து வெளியாக இருக்கிறது. அடுத்து ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா பேட்டைக்காரன் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் ஷூட்டிங்கும் கோவையை தொடர்ந்து சென்னையில் நடந்து வருகிறது.

ஜெய்பீம் எதற்கும் துணிந்தவன் படங்களை தொடர்ந்து சூர்யா, இப்போது பேட்டைக்காரன் படத்திலும் வக்கீல் கேரக்டரில் சூர்யா நடிக்கிறார். ஏற்கனவே மௌனம் பேசியதே ஆறு படங்களில் சூர்யாவுடன் நடித்த திரிஷா இந்த படத்தில் 3வது முறையாக இணைந்துள்ளார்.

இந்த படத்தில் ஆர்ஜே பாலாஜி வில்லனாகவும் லப்பர் பந்து பட நடிகை சுவாசிகா, நெடுஞ்சாலை பட நாயகி ஷிவதா ஆகியோரும் முக்கிய கேரக்டர்களில் நடித்து வருகின்றனர். ரெட்ரோ, பேட்டைக்காரன் படங்களை நடிகர் சூர்யா ரசிகர்கள் வெகு ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர்.

இந்நிலையில் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிக்கும் வாடிவாசல் படப்பிடிப்பு எப்போது என்று சூர்யா ரசிகர்கள் வெகு ஆர்வமாக எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். விடுதலை விடுதலை 2 படங்களுக்கு பிறகு வாடிவாசல் படப்பிடிப்பை துவங்க இயக்குனர் வெற்றிமாறனும் தயாராகி வருவதாக கூறப்பட்டது.

தை மாதம் பிறந்த 2ம் நாளான மாட்டுப் பொங்கல் தினமான இன்று வாடிவாசல் படம் குறித்த லேட்டஸ்ட் அப்டேட் வந்துவிட்டது. படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு, தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் சூர்யா, வெற்றிமாறனுடன் இருக்கும் தனது புகைப்படத்தை வெளியிட்டு பதிவு செய்துள்ளார்.

அந்த பதிவில், அவர்களது புகைப்படத்துக்கு கீழே ‘அகிலம் ஆராதிக்க வாடிவாசல் திறக்கிறது’ என்று எஸ் தாணு அதில் குறிப்பிட்டுள்ளார். இதையடுத்து வாடிவாசல் படப்பிடிப்பு விரைவில் துவங்குவதற்கான அறிகுறி வந்துவிட்டது. இந்த படத்தில் இயக்குனர் அமீரும் முக்கியமான கேரக்டரில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

சற்று முன்