தமிழ் சினிமாவில் ஆண்டுதோறும் நூற்றுக்கணக்கான படங்கள் தொடர்ந்து வெளிவந்துக்கொண்டே இருக்கின்றன. இதில் பெரும்பாலான படங்கள் வெற்றி பெறாமல் தோல்வியடைகின்றன. சில படங்கள் சுமாரான வெற்றியை பெறுகின்றன. பெரிய பட்ஜெட் படங்கள் தோல்வியடைவதும், சின்ன பட்ஜெட் படங்கள் பெரிய அளவில் ஜெயிப்பதும் தமிழ் சினிமாவில் அடிக்கடி நடக்கிறது.
அதில் குறிப்பிட்ட சில படங்கள் மட்டுமே பெரிய அளவில் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கின்றன. அது சில நேரங்களில் சாதாரண நடிகர்களின் படங்களாக கூட இருக்கலாம். உதாரணமாக மைனா, குட்நைட், காக்கா முட்டை போன்ற படங்களை சொல்லலாம். கதையை மையப்படுத்திய கதைகள் எப்போதுமே ரசிகர்களின் அமோக வரவேற்பை பெற்று விடுகின்றன.
நடப்பாண்டில் இதுவரை 100க்கும் மேற்பட்ட படங்கள் தமிழில் வந்துவிட்டன. ஆனால் வசூல் ரீதியாக சில படங்களும், மக்களின் வரவேற்பில் சில படங்கள் மட்டுமே வெற்றி பெற்றிருக்கின்றன. அரண்மனை 4, கருடன், மகாராஜா ஆகிய 3 படங்களை மட்டுமே சொல்ல முடியும். இதில் அரண்மனை 4 ஒரு திகில் படம். கருடன் சூரி நடிப்புக்காக வரவேற்கப்பட்ட படம். மகாராஜா உலக தரத்திலான ஒரு மிகச்சிறந்த படமாக ரசிகர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
இப்படி தமிழ் சினிமாவில் வந்த படங்களில் முக்கியமான ஒரு படம்தான் 7ஜி ரெயின்போ காலனி. டீன் ஏஜ் வயது காதலை மையப்படுத்தி இந்த படத்தை இயக்குனர் செல்வராகவன் இயக்கி இருந்தார். ரவி கிருஷ்ணா, சோனியா அகர்வால் நாயகன், நாயகியாக நடித்திருந்தனர். யுவன் சங்கர் ராஜா இசையில், கடந்த 2004ம் ஆண்டில் வெளியான இந்த படம் தமிழ் மற்றும் தெலுங்கில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற வெற்றிப் படமாக இருந்தது.
அதுமட்டுமின்றி தமிழ் சினிமா வரலாற்றில் 7ஜி ரெயின்போ காலனி முக்கிய காதல் படமாகவும் இன்று வரை பார்க்கப்படுகிறது. இதில் இடம்பெற்ற பாடல்கள் அனைத்துமே செம ஹிட் ஆகியது. இந்த படத்தின் 2ம் பாகம் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் காத்துக்கொண்டு இருக்கின்றனர்.
இந்த படத்தின் கதையை எடுக்க துவங்கிய போது, இந்த படத்தில் முதலில் சூர்யா அல்லது மாதவன் இருவரில் ஒருவர்தான் நடிக்க வேண்டும் என்று முடிவாகி இருக்கிறது. ஆனால் அவர்கள் இருவருமே வெவ்வேறு படங்களில் பிஸியாக நடித்துக்கொண்டு இருந்ததால், ரவி கிருஷ்ணா நாயகனாக நடித்திருக்கிறார். முதலில் அவருக்கு ஜோடியாக இந்த படத்தில் நடித்தது, சுப்ரமணியபுரம் படத்தில் நடித்த சுவாதிதான். ரவிகிருஷ்ணா, சுவாதி நடித்த படப்பிடிப்பு 20 நாட்கள் வரை நடந்துள்ளது. சுவாதி அப்போது படித்துக்கொண்டு இருந்ததால் அவரால் தொடர்ந்து நடிக்க முடியவில்லை. அதன்பிறகுதான் சோனியா அகர்வால், ரவிகிருஷ்ணாவுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.





