- Advertisement -
Homeபொழுதுபோக்குநான் கொடுத்த கதையையே மாத்திட்டாங்க... சங்கர் படம் பற்றி முதல் முறையாக பேசிய இயக்குனர் கார்த்திக்...

நான் கொடுத்த கதையையே மாத்திட்டாங்க… சங்கர் படம் பற்றி முதல் முறையாக பேசிய இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ்… என்னை இப்படி பேசிபுட்டாரு…

- Advertisement -

இயக்குனர் சங்கருக்கு தற்போது போதாத காலம் என்றுதான் கூற வேண்டும். அவரது இயக்கத்தில் வெளியாகும் எந்த திரைப்படங்களும் அந்த அளவுக்கு ரசிகர்களை கவரவில்லை. இதில் இந்தியன் 2 திரைப்படம் அவருக்கு பெரிய அடியை கொடுத்தது. இந்த திரைப்படத்திற்காக கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகள் வரை செலவழித்தார் சங்கர்.

பிரம்மாண்ட முறையில் காட்சிகளை எடுத்தார். பாடல்களுக்கும் அதிகம் மெனக்கிட்டார். இந்த திரைப்படத்தின் சூட்டிங்கின் போதே பல்வேறு தடங்கல்கள் வந்தன. படப்பிடிப்பின் போது ஏற்பட்ட விபத்தில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். அதேபோல், சங்கருக்கும் கமல்ஹாசனுக்கும் இடையே மனஸ்தாபம் ஏற்பட்டது.

- Advertisement -

தயாரிப்பாளர் தரப்பு முட்டி மோதிக்கொள்ள வழக்கு நீதிமன்றம் வரை சென்றது. இப்படி ஏராளமான பிரச்சனைகளை கடந்து வெளியான இந்த திரைப்படம் ரசிகர்களை எந்த ஒரு விதத்திலும் கவரவில்லை. மிகவும் தொய்வான திரைக்கதையை அமைத்ததால் கடும் விமர்சனத்திற்கு ஆளானார் சங்கர்.

அதுமட்டுமல்ல அவரை இணையத்தில் பலரும் கேலி கிண்டல் செய்தனர். இப்படியான சூழலில் அவர் ராம்சரணை வைத்து கேம் சேஞ்சர் என்னும் திரைப்படத்தை இயக்கினார். நேரடி தெலுங்கு திரைப்படமாக எடுக்கப்பட்டது. இந்தத் திரைப்படத்திற்கு ஒரு பெரும் எதிர்பார்ப்பு இருந்து வந்தது.

- Advertisement -

இதற்கு மிக முக்கிய காரணம் கார்த்திக் சுப்புராஜின் கதை தான். அவரிடம் கதையைப் பெற்றுக் கொண்டுதான் இதன் திரைக்கதையை அமைத்தார் சங்கர். ஆனால் ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு அப்படியே எதிராக இருந்தது கேம் சேஞ்சர். படம் தமிழ் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் ஒர்க்அவுட் ஆகவில்லை. இந்த நிலையில் அது குறித்து பேசி இருக்கும் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ்,

சங்கர் சாரிடம் நான் ஒன்லைன் மட்டும் தான் கூறினேன். இதனை சங்கர் சார் வெர்ஷனில் பார்க்க நான் ஆவலாக இருந்தேன். ஆனால் நிறைய எழுத்தாளர்கள் உள்ளே வந்ததால் கதையும் திரைக்கதையும் மாற்றியமைக்கப்பட்டு விட்டது. ஆமாம் கேம் சேஞ்சர் திரைப்படம் ரசிகர்களிடம் அந்த அளவு எதிர்பார்ப்பை பெறவில்லைதான் என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்