- Advertisement -
Homeபொழுதுபோக்குகடந்த 6 நாட்களில் கேம் சேஞ்சர், வணங்கான் படங்கள் செய்த வசூல் நிலவரம்; பின்னால் வந்து...

கடந்த 6 நாட்களில் கேம் சேஞ்சர், வணங்கான் படங்கள் செய்த வசூல் நிலவரம்; பின்னால் வந்து படு வேகமாக முந்திய மதகஜ ராஜா!

- Advertisement -

இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் நேரடியான தெலுங்கில் உருவான கேம் சேஞ்சர் படத்தில் ராம்சரண் ஹீரோவாக நடித்திருந்தார். ஆர்ஆர்ஆர் படத்துக்கு பிறகு 3 ஆண்டுகள் கழித்து வெளியான ராம்சரண் படம் என்பதால் ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. அதே போல் இந்தியன் 2 தோல்விக்கு பிறகு வெளியாகும் ஷங்கர் படம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஆனால் வழக்கமான ஷங்கர் படம் என்றே ஒரே விமர்சனத்தில் இந்த படம் எதிர்பார்ப்புகளை எல்லாம் தவிடுபொடியாக்கி விட்டது. அதுமட்டுமின்றி 5 மணி நேரம் ஓடக்கூடிய இந்த படத்தை பல காட்சிகளை அகற்றிவிட்டு ரிலீஸ் செய்ததால் அதில் பல நல்ல விஷயங்களை நானே அகற்ற நேர்ந்துவிட்டதாக ஷங்கரே கூறியிருந்தார்.

அதே நேரத்தில் கேம் சேஞ்சர் படம் வெளியான கடந்த 10ம் தேதி, இயக்குனர் பாலா இயக்கத்தில் உருவான வணங்கான் படமும் வெளியானது. இதில் வாய் பேசாத கேரக்டரில் அருண் விஜய் அமர்க்களமான நடிப்பை தந்திருந்தார். இந்த படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. பாலா இன்னமும் பழைய பார்மில்தான் இருக்கிறார் என ரசிகர்கள் பாராட்டுகின்றனர்.

இதற்கிடையே கேம் சேஞ்சர் வணங்கான் படங்கள் வெளியாகி 2 நாட்கள் கழித்து 12ம் தேதி சுந்தர் சி இயக்கத்தில் உருவான மதகஜ ராஜா படம் வெளியானது. 2012ம் ஆண்டில் உருவான இந்த படம் 12 ஆண்டுகள் கழித்து இந்த படம் திரைக்கு வந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. காமெடி காதல் ஜானரில் இந்த படம் சுந்தர் சியின் வழக்கமான ஜானரில் உருவாகியுள்ளது.

கேம் சேஞ்சர் படம் ரசிகர்களுக்கு பலத்த ஏமாற்றத்தை தந்த நிலையில், வணங்கான் படம் ரசிகர்களை திருப்திபடுத்தி இருக்கிறது. அதே நேரத்தில் மதகஜ ராஜா படம் காமெடி காட்சிகளால் ரசிகர்களை உற்சாகப்படுத்தி இருக்கிறது. அதனால் பொங்கல் ரிலீஸில் போட்டியில் ஜெயித்தது இயக்குனர் சுந்தர் சி யாக இருக்கிறார்.

கேம் சேஞ்சர் படம் 10ம் தேதி வெளியான நிலையில் கடந்த 6 நாட்களில் மொத்தம் 187 கோடி ரூபாய் வசூலித்திருக்கிறது. தமிழ்நாட்டில் மட்டும் ரூ. 8 கோடி வசூலை கடந்துள்ளது. வணங்கான் படமும் 6 நாட்களில் 7 கோடி ரூபாய் வசூலை தாண்டியுள்ளது. ஆனால் மதகஜ ராஜா படம் 4 நாட்களில் 15 கோடி ரூபாய் வசூலை கடந்து 2 நாட்கள் தாமதமாக வந்தும் முன்னிலை பெற்றுள்ளது.

சற்று முன்