தமிழ் சினிமாவில் மிக நல்ல படங்களை தந்து ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றவர் இயக்குனர் மிஷ்கின். சித்திரம் பேசுதடி அஞ்சாதே துப்பறிவாளன் சைக்கோ போன்ற இவரது படங்களில் பெரிய அளவில் ரசிகர்களால் கொண்டாடப்பட்டவை. நடிகராகவும் மிஷ்கின் ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.
நந்தலாலா சவரக்கத்தி லியோ மாவீரன் படங்களை தொடர்ந்து இப்போது வணங்கான் படத்திலும் நீதிபதி கேரக்டரில் மிக அற்புதமான நடிப்பை தந்திருக்கிறார். ஆனால் சில தினங்களுக்கு முன் நடந்த பாட்டல் ராதா பட விழாவில் மேடையில் பல பேர் முன்னிலையில் கெட்ட வார்த்தைகளை பேசி கடும் விமர்சனத்துக்கும் மிஷ்கின் ஆளாகி உள்ளார்.
ஜெயிலர் படத்தில் வில்லனாக நடித்தவர் மலையாள நடிகர் விநாயகன். இவரும் மிஷ்கின் போலவே விவகாரமான ஒரு கலைஞராகவே இருந்து வருகிறார். ஏற்கனவே தமிழில் திமிரு சிலம்பாட்டம் உள்ளிட்ட படங்களில் நடித்த விநாயகன், கடந்த 2023ம் ஆண்டில் வெளியான ஜெயிலர் படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடித்து அசத்தியிருந்தார். அவரது நடிப்பு மிரட்டலாக இருந்தது.
மலையாளத்திலும் பல படங்களில் சிறந்த நடிகராக தன்னை வெளிப்படுத்தி வரும் விநாயகன், குடிபோதையில் அடிக்கடி சர்ச்சையில் சிக்கிக் கொள்கிறார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன் ஐதராபாத் விமான நிலையத்தில் அங்கிருந்த அதிகாரிகளுடன் தகராறு செய்தார்.
கடந்தாண்டு கேரளாவில் போலீஸ் அதிகாரிகளுடன் போலீஸ் ஸ்டேஷனில் வாக்குவாதம் செய்து கைது செய்யப்பட்டார். கடந்த சில மாதங்களுக்கு முன் கோவாவில் ஒரு டீக்கடைக்காரரிடம் விநாயகன் தகராறு செய்த வீடியோ இணையத்தில் வைரலாக பரவியது. தற்போது தன் வீட்டு பால்கனியில் நின்றபடி எதிர் வீட்டுக்காரரை கெட்ட வார்த்தைகளில் விநாயகன் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இதில் திடீரென விநாயகன் வேட்டியை அவிழ்த்து காட்டியது, பால்கனியில் நிலை தடுமாறி உள்பக்க அறையில் விழுந்த காட்சிகளால் அவர் மதுபோதையில் இருப்பது நன்றாக தெரிகிறது. இந்த வீடியோ ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. ஒரு திறமையான நடிகர் இப்படி தேவையின்றி சர்ச்சைகளில் சிக்கி தனது பெயரை எடுத்துக் கொள்வது ரசிகர்களை வருத்தமடைய செய்துள்ளது.





