- Advertisement -
Homeபொழுதுபோக்குஏகே 64 படத்தை தயாரிக்க மறுத்த பிரபல தயாரிப்பு நிறுவனம், அந்த இயக்குனர் பிளாப் படங்களை...

ஏகே 64 படத்தை தயாரிக்க மறுத்த பிரபல தயாரிப்பு நிறுவனம், அந்த இயக்குனர் பிளாப் படங்களை தந்தவராச்சே? – அதற்கு அஜீத்குமார் சம்மதிப்பாரா?

- Advertisement -

கடந்த ஓராண்டுக்கு மேலாக நடிகர் அஜீத்குமாரின் அடுத்த படம் குறித்த எந்த தகவலும் இல்லை. குட்பேட் அக்லி படத்தை தொடர்ந்து ஓராண்டுக்கு மேலாக நடிகர் அஜீத்குமார் தனது அடுத்த படத்தில் நடிக்காமல் இருந்து வருகிறார். அவரது முழு கவனமும் கார் ரேஸ்சில் மட்டுமே இருந்து வருகிறது.

அஜீத்குமாரின் 64வது படத்தை இயக்கப் போவது ஆதிக் ரவிச்சந்திரன்தான் என அறிவிக்கப்பட்டது. ஆனால் தயாரிப்பு நிறுவனங்கள் எதுவும் ஏகே 64 படத்தை தயாரிக்க முன்வராத இந்த சூழ்நிலையில் அஜீத் குமாரே தனது படத்தை சொந்தமாக தயாரிக்க இருப்பதாகவும் ஷாலினி தான் அந்த படத்தின் தயாரிப்பாளர்.

- Advertisement -

அவரது மேற்பார்வையில் தான் ஏகே 64 படம் உருவாகப் போகிறது என்றும் சில வாரங்களுக்கு முன்பு கூறப்பட்டது. ஆனால் அது பொய்யான தகவல் என்று பிறகு தெரிய வந்தது. பல தயாரிப்பு நிறுவனங்களுடன் அஜீத்குமார் தரப்பில் பேச்சு வார்த்தை நடந்தும் ஏகே 64 படம் தயாரிப்பது குறித்த எந்த முடிவும் இதுவரை எட்டப்படவில்லை.

இந்த சூழ்நிலையில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்திடம் அஜீத்குமார் நடிக்கும் படம் குறித்து சமீபத்தில் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டுள்ளது. ஆனால் இறுதியில் அவர்கள் அஜீத்குமார் கேட்கும் அளவுக்கு சம்பளம் கொடுத்து இந்த படம் தயாரிக்க முடியாது என்று திட்டவட்டமாக மறுத்துவிட்டனர். இதற்கு முக்கிய காரணம் நடிகர் அஜீத்குமாரின் 185 கோடி ரூபாய் சம்பளம்தான்.

- Advertisement -

மேலும் சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜீத்குமார் நடிக்கும் ஒரு படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பதாக ஏற்கனவே ஒரு கமிட்மென்ட் இருந்தது. ஆனால் சிறுத்தை சிவா இயக்கிய அண்ணாத்த கங்குவா போன்ற படங்கள் பிளாப் ஆனதால் அஜீத்குமார் நடிக்கும் படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க சம்மதிக்கவில்லை.

நடிகர் அஜீத்குமாருக்கு இப்போது 2 வாய்ப்புகள் தான் உள்ளன. அதாவது அஜீத்குமார் தனது சம்பளத்தை கணிசமாக குறைத்துக் கொள்ள வேண்டும். அல்லது பிராபர்டி ஷேர் அடிப்படையில் படத்தின் லாபத்தை பொருத்து சம்பளம் வாங்கிக் கொள்ள வேண்டும். இந்த 2 விஷயங்களில் ஏதேனும் ஒன்றுக்கு அவர் ஓகே சொன்னால் மட்டுமே ஏகே 64 படம் தயாரிக்க ஒரு நல்ல சூழ்நிலை உருவாகும்.

- Advertisement -

சற்று முன்