- Advertisement -
Homeபொழுதுபோக்குவணங்கான் படப்பிடிப்பில் இயக்குனர் பாலா நடந்துக்கொண்ட விதம்…? வெளிப்படையாக பேசிய நடிகர் அருண் விஜய்!

வணங்கான் படப்பிடிப்பில் இயக்குனர் பாலா நடந்துக்கொண்ட விதம்…? வெளிப்படையாக பேசிய நடிகர் அருண் விஜய்!

- Advertisement -

இயக்குனர் பாலா இயக்கத்தில் நடிகர் அருண்விஜய் நடித்த படம் வணங்கான். கடந்த 10ம் தேதி வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. 20 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ் சினிமாவில் நடித்து வரும் நடிகர் அருண் விஜய்க்கு இந்த படம் மிகப்பெரிய வெற்றியை கொடுத்திருக்கிறது.

இதுகுறித்து நேர்காணல் ஒன்றில் நடிகர் அருண் விஜய் கூறியதாவது, இயக்குனர் பாலாவுடன் ஒரு படம் பண்ண வேண்டும் என்று ரொம்ப நாட்களாக வெயிட் பண்ணினேன். அவருடன் பணி செய்ய ஆசையாக இருந்தது. அப்படி ஒரு வாய்ப்பு வணங்கான் படத்தில் வந்த போது என்னுடைய முழு ஆற்றலை, அர்பணிப்பை கொடுத்தேன்.

- Advertisement -

சினிமாவில் இருக்கிற எல்லோருமே நமக்கு குடும்பம்தான். யாரும் வருத்தப்படாத ஒரு சூழலில் நாம் படங்கள் பண்ண வேண்டும். நான் பாலா சார் படத்தில், சூர்யா நடிக்க வேண்டிய கேரக்டரில் நான் நடிக்கிறேன் என்றவுடன் சூர்யா மிகவும் சந்தோஷப்பட்டார். சிவக்குமார், அப்பா ( விஜயகுமார்) எல்லாம் அந்த காலத்தில் இருந்தே நெருங்கிய நண்பர்கள்.

அதனால் படம் வெளியான பிறகு, நடிகர் சூர்யாவுக்கு நான் நன்றி சொன்னேன். இந்த படத்தில் நீங்கள் நடிக்காததால் எனக்கு அந்த வாய்ப்பு கிடைத்தது. உங்களால்தான் எனக்கு இந்த வெற்றி கிடைத்தது என்றும் மனதார நன்றி சொன்னேன். அவரும் என்னை பாராட்டினார்.

- Advertisement -

இயக்குனர் பாலாவிடம் பணிசெய்வது கடினம் என்று சிலர் சொல்வார்கள். ஆனால் என்னை பொருத்த வரை, அவருக்கு விஷூவலாக என்ன வேண்டும் என்பதில் கிளியராக இருக்கிறார். நம்மிடம் இருந்து அதை எப்படி வரவழைக்க வேண்டும் என்பதும் ஒரு இயக்குனராக அவருக்கு தெளிவாக தெரிகிறது. நம்மிடம் இருந்து அதை அழகாக வாங்குகிற திறமை அவரிடம் உள்ளது.

ஒரு நடிகரை அப்படியே மொத்தமாக மாற்றி வேறொரு மனிதராக காட்டும் திறமை உள்ள இயக்குனர் பாலா. அந்த ரிசல்ட்டுக்காக தான் அவர் படப்பிடிப்பில் டென்சன் ஆகிறார் என்றால் அதில் தவறே இல்லை. ஆனால் என்னை பொருத்த வரை ஷூட்டிங்கில் என்னை நல்லா பார்த்துகிட்டார். இனிமையாக நடந்துக்கொண்டார் என்று நடிகர் அருண் விஜய் அந்த நேர்காணலில் கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்