- Advertisement -
Homeபொழுதுபோக்குவிஷால் கூட்டணியில் அடுத்த படத்துக்கு தயாரான இயக்குனர் சுந்தர் சி, அப்செட் ஆன தயாரிப்பாளர் -...

விஷால் கூட்டணியில் அடுத்த படத்துக்கு தயாரான இயக்குனர் சுந்தர் சி, அப்செட் ஆன தயாரிப்பாளர் – நயன்தாரா ஏற்படுத்திய சர்ச்சை!

- Advertisement -

இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் 12 ஆண்டுகளுக்கு முன் உருவான படம் மதகஜ ராஜா, இப்போது திரைக்கு வந்து ரூ. 50 கோடி வசூலை கடந்து வெற்றிக்கரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது. விஷால் சந்தானம் வரலட்சுமி சரத்குமார் அஞ்சலி சோனாசூட் மணிவண்ணன் மனோபாலா நடித்த இந்த படம் அபார வரவேற்பை ரசிகர்களிடம் பெற்றிருக்கிறது.

இதையடுத்து மீண்டும் விஷால் கூட்டணியில் புதிய படத்தை துவங்க இயக்குனர் சுந்தர் சி தயாராகி விட்டார். இந்த படத்தை ஏசி சண்முகத்தின் பென்ஸ் மீடியா நிறுவனம் தயாரிக்க உள்ளது. இந்த படத்துக்கான ப்ரீ புரடக்சன்ஸ் பணிகளை இயக்குனர் சுந்தர் சி துவங்கி விட்டார். விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாக உள்ளது.

ஆனால் ஏற்கனவே வேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பு நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் தயாரிப்பில் மூக்குத்தி அம்மன் 2 படம் உருவாகவும் அதில் நாயகியாக நயன்தாரா நடிக்கவும் சுந்தர் சி இயக்கவும் முடிவு செய்து அறிவிப்பு வெளியாகி விட்டது. ஆனால் பல மாதங்களாக அந்த படப்பிடிப்பு இன்னும் துவங்கவில்லை.

மூக்குத்தி அம்மன் 2 படத்தில் நடிக்க சம்பளம் எதுவும் பேசாத நடிகை நயன்தாரா, அதற்கு பதிலாக ரவுடி பிக்சர்ஸ் நிறுவனமும் இந்த படத்தை இணைந்து தயாரிக்க வேல்ஸ் பிலிம்ஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் போட்டுள்ளார். ஆனால் அவர் இதுவரை மூக்குத்தி அம்மன் 2 படத்துக்கு கால்ஷீட் ஒதுக்கி தரவில்லை.

இந்நிலையில் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ், மூக்குத்தி அம்மன் 2 படத்தை முடித்துவிட்டு பிறகு விஷால் நடிக்கும் படத்தை துவங்குங்கள் என்று சுந்தர் சியிடம் கூறியுள்ளார். அதற்கு சுந்தர் சி, முதலில் நயன்தாராவிடம் கால்ஷீட் வாங்கி வாருங்கள்.

அப்போது மூக்குத்தி அம்மன் 2 ஷூட்டிங்கை உடனே துவங்கி விடலாம். நயன்தாரா கால்ஷீட் தரும்வரை நான் காத்திருக்க முடியாது. அதுவரை என் பட வேலைகளை நான் பார்க்கிறேன் என்று சுந்தர் சி மறுத்து விட்டார். நடிகை நயன்தாராவிடம் அப்படி உடனே பேசி கால்ஷீட் வாங்குவது சுலபமான காரியம் இல்லை என்ற நிலையில் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் அப்செட்டில் உள்ளதாக தெரிய வந்துள்ளது.

சற்று முன்