- Advertisement -
Homeபொழுதுபோக்குநடிப்பில் நீ ஜெயிக்கவில்லை என்றால்… நடிக்க வருவதற்கு முன் இயக்குனர் ஷங்கர் போட்ட கண்டிஷன் -...

நடிப்பில் நீ ஜெயிக்கவில்லை என்றால்… நடிக்க வருவதற்கு முன் இயக்குனர் ஷங்கர் போட்ட கண்டிஷன் – தனது அப்பா குறித்து பேசிய நடிகை அதிதி ஷங்கர்!

- Advertisement -

ஜெண்டில் மேன் படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் ஷங்கர். 1990களிலேயே பிரமாண்ட இயக்குனர் என்ற பெயர் வாங்கியவர். 30 ஆண்டுகளில் தமிழ் சினிமாவில் இயக்கிய இதுவரை 15 படங்கள்தான் என்பது கவனிக்கத்தக்கது. ஆனால் ஒவ்வொரு படமும் அவரது பெயர் சொல்லும் படங்களாக இருந்தன என்பதும் குறிப்பிடத்தக்கது.

சிவாஜி எந்திரன் 2.0 இந்தியன் இந்தியன் 2 முதல்வன் ஜெண்டில்மேன் நாயக் அந்நியன் ஐ நண்பன் ஜீன்ஸ் பாய்ஸ் காதலன் மற்றும் கேம் சேஞ்சர் என ஷங்கர் இயக்கிய 15 படங்களில் இந்தியன் 2 கேம் சேஞ்சர் படங்கள் மட்டுமே எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.

- Advertisement -

ஆனால் ரஜினி கமல் விஜய் அர்ஜூன் விக்ரம் பிரசாந்த் என முன்னணி நடிகர்களுக்கு பெரிய இமேஜ் ஏற்படுத்தி தந்த படங்களாக ஷங்கர் இயக்கிய படங்கள் இருந்தன. அதனால் ஷங்கர் படத்தில் நடிப்பதே பெரிய வாய்ப்பாக இன்றும் பல நடிகர்கள் கருதுகின்றனர். இந்திய அளவில் கவனிக்கப்படுபவராக ஷங்கர் இருந்து வருகிறார்.

ஷங்கருக்கு ஐஸ்வர்யா, அதிதி என 2 மகர்களும் ஒரு மகனும் உள்ளனர். இதில் அதிதி ஷங்கர் சினிமாவில் நடித்து வருகிறார். கார்த்தியுடன் விருமன் படத்தில் அறிமுகமான அவர் மாவீரன் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்திருந்தார். நேசிப்பாயா படத்தில் நடிகர் முரளியின் மகன், அதர்வாவின் தம்பி ஆகாஷ் முரளிக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

- Advertisement -

விருமன் மாவீரன் படங்கள் பெரிய வரவேற்பை ரசிகர்களிடம் பெற்ற நிலையில் நேசிப்பாயா படத்துக்கு போதிய வரவேற்பு இல்லை என்ற போதிலும் அதிதி ஷங்கர் தொடர்ந்து படங்களில் நடிக்க கமிட் ஆகி வருகிறார். மருத்துவ படிப்பு படித்த அதிதி ஷங்கர் சினிமாவில் நடிக்க விரும்பிய போது, அவரது அப்பா இயக்குனர் போட்ட கண்டிஷன் குறித்து அதிதி ஷங்கர் சமீபத்தில் கூறியிருக்கிறார்.

நேர்காணல் ஒன்றில் இதுபற்றி அதிதி ஷங்கர் கூறியதாவது, எம்பிபிஎஸ் படித்த பின் சினிமாவில் நடிக்க முயற்சிப்பேன் என அப்பாவிடம் ஒருமுறை சொன்னேன். நீண்ட நேரம் யோசித்த பிறகு அவர், எனக்கு ஒரு நிபந்தனை விதித்து, நடிக்க சம்மதித்தார். அதாவது, நீ சினிமாவில் ஒருவேளை ஜெயிக்க முடியவில்லை என்றால், மருத்துவத்துக்கு திரும்பி வந்துவிட வேண்டும் என்ற கண்டிஷன்தான் அது, என்று அதிதி ஷங்கர் கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்