- Advertisement -
Homeபொழுதுபோக்குஜனநாயகன் படம் அந்த தெலுங்கு படத்தின் ரீ மேக்தான், இதற்கு விஜய் சம்மதிக்க அதுதான் முக்கிய...

ஜனநாயகன் படம் அந்த தெலுங்கு படத்தின் ரீ மேக்தான், இதற்கு விஜய் சம்மதிக்க அதுதான் முக்கிய காரணம் – உண்மையை போட்டுடைத்த பிரபலம்!

- Advertisement -

நடிகர் விஜய் இப்போது ஜனநாயகன் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்துடன் தமிழ் சினிமாவுக்கு குட்பை சொல்லும் விஜய், தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவராக தமிழ்நாட்டு அரசியலில் முழுகவனம் செலுத்த இருக்கிறார். ஏற்கனவே தவெக அரசியல் மாநாட்டை வெற்றிக்கரமாக கடந்தாண்டில் நடத்தி முடித்த அவர், மக்களை நேரில் சென்று சந்திக்க திட்டமிட்டு வருகிறார்.

ஜனநாயகன் படப்பிடிப்பை முடித்த பிறகு, தமிழ்நாடு முழுவதும் மாவட்டம் வாரியாக, தொகுதி வாரியாக மக்களை நேரில் சென்று சந்திக்க விஜய் ஆலோசித்து வருகிறார். இதற்கிடையே கட்சியின் மண்டல மாநாடுகளை நடத்தவும் மக்களை நேரடியாக சந்தித்து குறைகளை கேட்கவும் முடிவு செய்திருக்கிறார்.

வரும் 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தலுக்குள் 2 கோடி உறுப்பினர்களை கட்சியில் சேர்ப்பது என்ற தீவிர நோக்கத்துடன் விஜய் கட்சி நிர்வாகிகளை முடுக்கி விட்டுள்ளார். இதுவரை 90 லட்சம் பேர் வரை தவெக கட்சியில் இணைந்துள்ளதாக தெரிய வருகிறது. இன்னும் உறுப்பினர் சேர்க்கையை தீவிரப்படுத்த கட்சியின் முக்கிய நிர்வாகிகளும் தீவிரம் காட்டி வருகின்றனர்.

இந்த சூழலில், விஜய் இப்போது நடித்து வரும் ஜனநாயகன் படத்தை, எச் வினோத் இயக்கி வருகிறார். இந்த படம் தெலுங்கில் பாலகிருஷ்ணா நடிப்பில் வெளியான பகவந் கேசரி என்ற படத்தின் ரீ மேக் என்பதை சினிமா மூத்த பத்திரிகையாளர் வலைப்பேச்சு ஜெ பிஸ்மி உறுதிப்படுத்தி பேசியிருக்கிறார்.

இதுகுறித்து நேர்காணல் ஒன்றில் அவர் கூறியதாவது, நடிகர் விஜய் நடித்து வரும் அவரது கடைசி படம், பகவந் கேசரி என்ற படத்தின் ரீ மேக் தான். அதில் எந்த சந்தேகமும் இல்லை. இப்படி ஏற்கனவே வெளியான ரீ மேக் படத்தில் விஜய் நடிக்க முக்கிய காரணமும் இருக்கிறது.

இது விஜயின் கடைசி படம் என்று ஏற்கனவே அவர் அறிவித்துவிட்டார். தனது கடைசி படத்தை மிகப்பெரிய வெற்றிப் படமாக ரசிகர்களுக்கு தர வேண்டும் என்பது மிக முக்கியம். புதிய கதை படத்தில் நடித்து ரிஸ்க் எடுக்க நடிகர் விஜய் விரும்பவில்லை. தனது கடைசி படம் பிளாப் ஆகி விடக்கூடாது என்பதற்காகவே, தெலுங்கில் பெரிய வெற்றியை பெற்ற பகவந் கேசரி படத்தின் ரீ மேக்கில் உருவாகும் ஜனநாயகன் படத்தில் நடித்துள்ளார், என்று கூறியிருக்கிறார்.

சற்று முன்