- Advertisement -
Homeபொழுதுபோக்குமீண்டும் ஹீரோவாக களம் இறங்கி ரீ என்ட்ரி தரும் நடிகர் அப்பாஸ், ரசிகர்களிடம் பழைய...

மீண்டும் ஹீரோவாக களம் இறங்கி ரீ என்ட்ரி தரும் நடிகர் அப்பாஸ், ரசிகர்களிடம் பழைய வரவேற்பை பெறுவாரா? – வெற்றிக்கு நாயகிகள் கை கொடுப்பார்களா?

- Advertisement -

சினிமாவில் ஜெயிப்பதும் தோற்பதும் பரமபதம் விளையாட்டு மாதிரிதான். ஒரு நேரத்தில் சரசர என ஏணி மேல் ஏறுவதும் நடக்கும். உச்சத்தை தொடப் போகும் நேரத்தில் பாம்புவிடம் சிக்கி மளமள என அதள பாதாளத்துக்கு இறங்கி வந்துவிடுவதும் நடக்கும். தமிழ் சினிமாவில் அப்படி முன்னேறியவர்களும் உண்டு, சறுக்கி கீழே வந்துவிடுபவர்களும் உண்டு. ஆனால் சிலர், போராடி போராடி சினிமாவில் சாதிக்க நினைக்கின்றனர்.

அப்படி மிக விரைவில் சினிமாவில் முன்னேற்றம் கண்டவர்கள் வரிசையில் நடிகர்கள் சிவகார்த்திகேயன் சூரி யோகிபாபு சந்தானம் மொட்டை ராஜேந்திரன் ரோபோ சங்கர் போன்றவர்களை குறிப்பிட்டுச் சொல்லலாம். ஏனென்றால் இவர்கள் குறுகிய காலத்தில் ரசிகர்களின் மனதில் இடம்பிடிக்கும் விதமான பட வாய்ப்புகளை பெற்று தங்களது திறமையால், உழைப்பால் அடையாளம் காணப்பட்டவர்களாக உள்ளனர்.

கடந்த 1990களில் தமிழ் சினிமாவில் சாக்லேட் பாயாக, டீன் ஏஜ் பெண்களின் மனம் கவர்ந்த கனவு நாயகனாக வலம் வந்தவர் நடிகர் அப்பாஸ். காதல் தேசம் பம்மல் கே சம்பந்தம் திருட்டுப் பயலே ஆனந்தம் குரு என் ஆளு மானஸ்தன் மின்னலே மலபார் போலீஸ் படையப்பா உள்ளிட்ட பல படங்களில் நடித்தார்.

இதில் சில படங்களில் இரட்டை நாயகர்களில் ஒருவராகவும், சில படங்களில் முக்கிய வேடங்களில் ஒருவராகவும் அப்பாஸ் நடித்திருந்தார். இவருக்கு காதல் தேசம், ஆனந்தம் படங்கள் பெரிய அளவில் அடையாளத்தை பெற்றுத் தந்தது. ஆனால் ஒரு கட்டத்தில் தமிழ் சினிமாவில் மார்க்கெட் இழந்தார். தெலுங்கில் நடித்த படங்களும் அப்பாஸூக்கு கை கொடுக்கவில்லை.

இந்நிலையில் கடந்த பல ஆண்டுகளாக தமிழ், தெலுங்கு சினிமாவில் நடிக்காமல் உள்ள நடிகர் அப்பாஸ், மீண்டும் நடிக்க வந்துள்ளார். ஆனால் அவர் நடிக்கப் போவது சினிமாவில் இல்லை. இயக்குனர் சற்குணம் இயக்க உள்ள ஒரு வெப் சீரிஸில்தான் அவர் நடிக்கிறார். புஷ்கர் காயத்ரி தயாரிக்கும் இந்த வெப் சீரிஸில் நாயகிகளாக துஷாரா விஜயன் அதிதி பாலன் ஆகியோர் நடிக்க உள்ளனர்.

இந்த வெப் சீரிஸ்க்கு எக்ஸாம் என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. களவாணி வாகை சூடவா நையாண்டி சண்டிவீரன் போன்ற ஹிட் படங்களை இயக்கியவர் சற்குணம். முதன் முறையாக வெப் சீரிஸ் இயக்க முன்வந்துள்ளார். பெண்களை மையப்படுத்திய இந்த கதையில் முதன் முறையாக நடிக்கிறார் அப்பாஸ். இந்த படம் அவருக்கு ரீ என்ட்ரியாக மாஸ் ஹிட் கொடுத்து, கம்பேக் ஆக அமையுமா என்பது போக போகதான் தெரியும்.

சற்று முன்