தெலுங்கில் பிரபல நடிகரான நாகர்ஜூனாவின் மகன் நாக சைதன்யா. இவரும் நடிகை சமந்தாவும் கடந்த 2017ம் ஆண்டில் காதலித்து திருமணம் செய்துக்கொண்டனர். ஆனால் திருமணமான 4 ஆண்டுகளில் அவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்து விட்டனர்.
சமந்தா, நாக சைதன்யாவை பிரிந்த பிறகு சினிமாவில் மீண்டும் ஆர்வமாக நடித்து வருகிறார். தமிழ் தெலுங்கு இந்தி படங்கள் மற்றும் வெப் சிரீஸ்களில் தொடர்ந்து நடிக்கிறார். இதற்கிடையே மயோசிடிஸ் என்ற தோல் அலர்ஜி நோயால் பாதிக்கப்பட்ட அவர், கடுமையான துன்பங்களை சந்தித்தார்.
தீவிர மருத்துவ சிகிச்சைகளுக்கு பிறகு, பல மாதங்கள் வீட்டில் இருந்து சிகிச்சை எடுத்த நிலையில் ஓரளவு குணமடைந்துள்ளார். எனினும் தனது உடல்நல பாதிப்பை பெரிதாக கருதாமல், படங்களில் நடிப்பதில் சமந்தா ஆர்வமாக உள்ளார். சமந்தாவின் நடிப்பில் சிட்டாடல் என்ற இந்தி வெப் சீரிஸ் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பையும் பெற்றிருக்கிறது.
இதற்கிடையே நடிகர் நாக சைதன்யா, நடிகை சோபிதா துலிபாலாவை காதலித்து 2வது திருமணம் செய்துக்கொண்டார். நடிகை சமந்தா தனக்கு இனி திருமணமே வேண்டாம் என்று கூறி வரும் நிலையில் சமந்தாவை பிரிந்த சில ஆண்டுகளிலேயே நாக சைதன்யா 2வது திருமணம் செய்திருப்பதை ரசிகர்கள் பலர், இணையத்தில் ட்ரோல் செய்து கலாய்த்து விமர்சித்து வருகின்றனர்.
இந்நிலையில் ஒரு நேர்காணலில் பேசிய நடிகர் நாக சைதன்யா, தனது திருமணம் குறித்து பேசியிருக்கிறார். அப்போது அவர் கூறுகையில், நான் சமந்தாவை பிரிய வேண்டும், அவரை விவாகரத்து செய்ய வேண்டும் என்ற முடிவை 100 முறை யோசித்துதான் எடுத்தேன். அது நடந்து பல ஆண்டுகள் ஆகி விட்டது.
ஆனால் இப்போதும் நான் ஒரு குற்றவாளியை போல நடத்தப்படுகிறேன். இது என்னை மிகவும் புண்படுத்துகிறது. இது நான் மட்டுமின்றி என் மனைவி சோபிதாவும் டி ரோல்களுக்கு ஆளாகிறார். இது மிகவும் எனக்கு வேதனை தருவதாக இருக்கிறது என்று, நடிகர் நாக சைதன்யா வருத்தமாக பேசியிருக்கிறார்.





