- Advertisement -
Homeபொழுதுபோக்குஅந்த 2 பேரும் ரெக்கார்டு டான்ஸ் ஆடிட்டு இருந்தாங்க, அப்புறம்தான் சினிமாவில் நடிக்க வந்தாங்க, பிரபலம்...

அந்த 2 பேரும் ரெக்கார்டு டான்ஸ் ஆடிட்டு இருந்தாங்க, அப்புறம்தான் சினிமாவில் நடிக்க வந்தாங்க, பிரபலம் போட்டுடைத்த சீக்ரெட் – அந்த நட்சத்திர நடிகைகளா அது?

- Advertisement -

தமிழ் சினிமாவில் எம்ஜிஆர் சிவாஜி கணேசன் ஜெமினி கணேசன் போன்ற ஜாம்பவான் நடிகர்களுக்கு ஜோடியாக பல படங்களில் நடித்தவர் கேஆர் விஜயா. இவரை புன்னகை அரசி என்றுதான் ரசிகர்கள் அழைப்பார்கள். ஆரம்பத்தில் நாயகியாகவும் பிறகு அம்மா கேரக்டர்களிலும் நடித்து ரசிகர்களின் மனம் கவர்ந்தவர்.

அதே போல் நடிகை செம்மீன் ஷீலாவும் பல படங்களில் முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்தவர். சந்திரமுகி படத்தில் நடிகர் நாசரின் தாயாக அவர் நடித்திருப்பார். மேலும் பாலக்காட்டு மாதவன் படத்தில் நடிகர் விவேக் தாயாகவும் ஷீலா நடித்திருந்தார். நடிகைகள் கேஆர் விஜயா, செம்மீன் ஷீலா குறித்து பயில்வான் ரங்கநாதன் ஒரு முக்கிய தகவலை கூறியிருக்கிறார்.

- Advertisement -

சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய நடிகர் மற்றும் பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் கூறியதாவது, வறுமை காரணமாகவும் பிழைப்புக்காகவும் சினிமாவில் நடிக்க வந்தவர்தான் கேஆர் விஜயா. பழனியில் அவர் ரெக்கார்டு டான்ஸ் ஆடியவர். அந்த டான்ஸ் ஆடிய ஸ்டில்ஸ்சை பார்த்துதான் இயக்குனர் கேஎஸ் கோபாலகிருஷ்ணன் யார் இந்த பொண்ணு என்று விசாரித்தார்.

பழனியில் இருக்கிறார் என்று தெரிந்ததும் கேஆர் விஜயாவை நேரில் அழைத்து வருமாறு சொன்னார். அப்படி அவர் வந்த போது கேஆர் விஜயாவுக்கு நிறைய ஹோம் ஒர்க் கொடுத்தார். ஒரு மாதம் கற்பகம் படத்தில் நடிப்பதற்கு முன்பே தமிழ் எப்படி பேசணும், டயலாக் எப்படி பேசணும் எல்லாம் டிரயெ்னிங் கொடுத்தார்.

- Advertisement -

எந்தவிதமான பின்புலமும் இல்லாமல் சினிமாவுக்கு வந்து முன்னேறியவர் கேஆர் விஜயா. கேஆர் விஜயாவை பின்பற்றி அதே போல் சினிமாவில் 100 படங்களுக்கு மேல் நடித்தவர் ஷீலா. பிரேம் நசீருக்கு ஜோடியாக நடித்தவர். செம்மீன் ஷீலா என்கிற அவரும் கோவையில் ரெக்கார்ட் டான்ஸ் ஆடினவங்க தான். நானே அவர் ரெக்கார்டு டான்ஸ் ஆடியதை பார்த்திருக்கிறேன் என்று நடிகர் பயில்வான் ரங்கநாதன் கூறியிருக்கிறார்.

தமிழ் சினிமாவில் ஒரு கௌரவமான நடிகையாக பார்க்கப்படுபவர் கேஆர் விஜயா. அதே போல் செம்மீன் ஷீலாவும் பல படங்களில் நடித்து ரசிகர்களின் மனம் கவர்ந்தவர். அவர்களின் ஆரம்பகால வாழ்க்கை என்பது வறுமை நிறைந்ததாக இருந்துள்ளது. அதனால் ரெக்கார்டு டான்ஸ் ஆடிய நிலையில் பிறகு சினிமாவுக்கு வந்து முன்னேறி பிரபலமாகி விட்டனர் என்று அந்த நேர்காணலில் பயில்வான் ரங்கநாதன் கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்