- Advertisement -
Homeபொழுதுபோக்குவிஜயை நடிக்க வெச்சு ரூ. 500 கோடி வசூலித்தால் அது பெரிய வெற்றி கிடையாது -...

விஜயை நடிக்க வெச்சு ரூ. 500 கோடி வசூலித்தால் அது பெரிய வெற்றி கிடையாது – பகிரங்கமாக விளாசித் தள்ளிய பிரபல இயக்குனர்!

- Advertisement -

நடிகர் விஜய் தமிழ் சினிமாவில் ரசிகர்களால் கொண்டாடப்படும் நடிகராக இருந்து வருகிறார். ரஜினிக்கு பிறகு மாஸ் ஒபனிங் தருவது விஜய் படங்களாக முதலில் இருந்தது. இப்போது ரஜினி படங்களை காட்டிலும் அதிக மாஸ் ஓபனிங் தரும் படங்களாக விஜய் நடித்த படங்கள் மாறியதும் குறிப்பிடத்தக்கது.

படங்களின் அபார வசூலை பொறுத்துதான் சூப்பர் ஸ்டார் என்றால், அந்த வகையில் ரஜினியை காட்டிலும் விஜய்தான் சூப்பர் ஸ்டார் என யாரோ கொளுத்திப் போட்டதன் விளைவுதான் கடந்த சில ஆண்டுகளில் விஜய், ரஜினி இருவரது ரசிகர்களுக்கு இடையில் நடந்த சூப்பர் ஸ்டார் பஞ்சாயத்து என்பதும் கவனிக்கத்தக்கது.

கடந்த சில ஆண்டுகளில் நடிகர் விஜய் நடித்த பல படங்கள் 400 கோடி ரூபாய் 600 கோடி வரை வசூலில் சாதனை படைத்தது. கடந்தாண்டில் வெளியான தமிழ் படங்களில் நடிகர் விஜய் நடித்த தி கோட் படம் ரூ. 445 கோடி வசூலித்து முதலிடத்தை பிடித்ததும் குறிப்பிடத்தக்கது. அதே போல் லியோ வாரிசு பீஸ்ட் மாஸ்டர் போன்ற படங்களும் விஜய்க்கு பெரிய வசூலை அள்ளித் தந்தன.

இதில் லியோ வாரிசு பீஸ்ட் போன்ற படங்கள் மொக்கையான படங்கள் என எதிர்மறை விமர்சனங்களில் சிக்கியவை. லியோ படத்தில் இரட்டை பிறவி நரபலி போன்ற விஷயங்கள் படத்தை கடுமையாக பாதித்தன. அதே போல் வாரிசு படம் டிவி சீரியல் நாடகம் போல இருந்தது. பீஸ்ட் படத்தை பார்த்தவர்கள் கழுவி கழுவி ஊற்றினர்.

எனினும் விமர்சன ரீதியாக தோல்வி படங்களாக வசூல் ரீதியாக விஜய் படங்கள் ஜெயித்து விடுகின்றன. இதற்கு முக்கிய காரணம் நடிகர் விஜய் என்ற ஸ்டார் வேல்யூ தான். மற்றபடி அவரது நடிப்பை தாண்டி திரையில் அவரை பார்ப்பதே மிகப்பெரிய மகிழ்ச்சியாக ரசிகர்கள் கருதுவதுதான். ஒரு காலத்தில் எம்ஜிஆருக்கு இப்படி ஒரு புகழ் ரசிகர்களின் மத்தியில் இருந்தது.

இந்நிலையில், நான் மகான் அல்ல வெண்ணிலா கபடிக்குழு போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் சுசீந்திரன் ஒரு நேர்காணலில் கூறியதாவது, இன்று நான் ஜீவா படத்தை எடுத்தால் 100 கோடி ரூபா வசூலிக்கும். நான் 5 கோடி ரூபாய்க்கு படம் பண்ணி, 500 கோடி ரூபா வசூலிக்க முடியும். இன்னைக்கு விஜயை வெச்சு 300 கோடி ரூபாய் செலவு பண்ணி, 500 கோடி ரூபாய் வசூலிக்கிறது பெரிய விஷயமல்ல. 5 கோடிக்கு படம் பண்ணி, 100 கோடி ரூபாய் வசூல் செய்து காட்டணும், அதுதான் டைரக்டர் திறமை என்று சுசீந்திரன் பேசியிருக்கிறார். இது இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

சற்று முன்