- Advertisement -
Homeபொழுதுபோக்குநடிகர் கமல்ஹாசனை திடீரென சந்தித்த திமுக அமைச்சர் சேகர் பாபு, இப்படி ஒரு விஷயம் விரைவில்...

நடிகர் கமல்ஹாசனை திடீரென சந்தித்த திமுக அமைச்சர் சேகர் பாபு, இப்படி ஒரு விஷயம் விரைவில் நடக்கப் போகிறதா? கமல் ரசிகர்கள் உற்சாகம்!

- Advertisement -

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருப்பவர் நடிகர் கமல்ஹாசன். மக்கள் நீதி மய்யம் என்ற அரசியல் இயக்கத்தின் தலைவராகவும் 10 ஆண்டுகளுக்கு மேலாக இருந்து வருகிறார். அவரது நடிப்பில் உருவான தக்லைப் படம் வருகிற ஜூன் 5ம் தேதி ரிலீஸாக உள்ளது. விரைவில் இந்தியன் 3 படப்பிடிப்பில் பங்கேற்க உள்ளார்.

சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள நடிகர் கமல்ஹாசனின் அலுவலகத்தில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு நேற்று நடிகர் கமல்ஹாசனை சந்தித்து பேசினார். இதுகுறித்து மக்கள் நீதி மய்யம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் திமுக அமைச்சர் சேகர்பாபு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனை அவரது அலுவலகத்தில் மரியாதை நிமித்தமாக சந்தித்தார் என்று கூறப்பட்டுள்ளது.

நடிகர் கமல்ஹாசனுடன் திடீர் சந்திப்பு குறித்து அமைச்சர் சேகர் பாபுவிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, தேர்தல் தொடர்பான சந்திப்பா என்று கேட்கிறீர்கள். சட்டப்பேரவை தேர்தலுக்கு இன்னும் 14 மாதங்கள் இருக்கின்றன என்று சேகர்பாபு பதில் அளித்துள்ளார். ஆனால் வேறு எந்த தகவலையும் அவர் கூறவில்லை. ஆனால் திமுக கூட்டணியில் உள்ள மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனை அமைச்சர் சேகர்பாபு நேற்று திடீரென நேரில் சந்தித்து பேசியது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விரைவில் திமுக எம்எல்ஏக்கள் ஆதரவுடன் கமல்ஹாசன் மாநிலங்களவை எம்பியாக தேர்வு செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது. ஏனெனில் கடந்த 2021ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்டு நடிகர் கம்லஹாசன் தோல்வியை சந்தித்தார். அதன் பிறகு மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் இணைந்தார்.

திமுக கூட்டணி சார்பில் மக்களவைத் தேர்தலில் கமல்ஹாசன் போட்டியிடவில்லை. ஆனால் திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தமிழ்நாடு முழுவதும் அவர் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார். இந்த கூட்டணியின் போது கமலுக்கு மாநிலங்களவை எம்பி பதவி வழங்கப்படும் என உடன்பாடு செய்யப்பட்ட நிலையில், மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணி 39 தொகுதிகளில் வெற்றி பெற்றது.

அதனால் தான் இப்போது மாநிலங்களவை எம்பியாக கமல்ஹாசன் தேர்வு செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இது கமல்ஹாசன் ரசிகர்கள் மற்றும் கட்சித் தொண்டர்களை உற்சாகப்படுத்தியுள்ளது. மக்கள் நீதிமய்யம் என்ற அரசியல் இயக்கத்தை ஆரம்பித்து பல ஆண்டுகள் கடந்த நிலையில் எந்த ஒரு பிரநிதித்துவமும் இல்லாமல் இருந்த கமலுக்கு திமுக ஆதரவால் இந்த எம்பி பதவி கிடைக்கப் போவதும் குறிப்பிடத்தக்கது.

சற்று முன்