- Advertisement -
Homeபொழுதுபோக்குரஜினிக்கும் விஜய்க்கும்தான் போட்டியே, அஜித் அவ்வளவுதான்- ரசிகர்களை காண்டாக்கிய சினிமா பையன்

ரஜினிக்கும் விஜய்க்கும்தான் போட்டியே, அஜித் அவ்வளவுதான்- ரசிகர்களை காண்டாக்கிய சினிமா பையன்

- Advertisement -

“ஜெயிலர்” திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் ரஜினிகாந்த் கூறிய காகா-கழுகு கதை விஜய் ரசிகர்களை சீண்டியுள்ளது என்றே சொல்ல வேண்டும். விஜய்தான் இப்போது சூப்பர் ஸ்டார் என்று விஜய் ரசிகர்கள் கொண்டாடி வரும் நிலையில் ரஜினிகாந்தின் இந்த பேச்சு விஜய் ரசிகர்களை உசுப்பேத்தியுள்ளது. சமூக வலைத்தளங்களில் விஜய் ரசிகர்களும் ரஜினி ரசிகர்களும் மாறி மாறி வசைபாடி வருகின்றனர். ஃபேஸ்புக், டிவிட்டர் ஆகிய வலைத்தளங்கள் சமீப நாட்களாக போர்க்களம் போலவே காட்சியளித்து வருகிறது.

ரஜினிகாந்த் “நான்தான் இப்போது சூப்பர் ஸ்டார்” என்று வெளிப்படையாக சொல்லவில்லை என்றாலும் கிட்டத்தட்ட நாசுக்காக அதனை கூறிவிட்டார் என்று பலரும் அவர் கூறிய காகா கதையை டீகோட் செய்து வருகின்றனர். அதுமட்டுமல்லாது எரிகிற நெருப்பில் பெட்ரோலை ஊற்றியது போல், தயாரிப்பாளர் கலாநிதி மாறன், “ரஜினிகாந்திற்கு இப்போது 72 வயது. இந்த வயதிலும் தயாரிப்பாளர்கள் வரிசையில் நிற்கிறார்கள். உங்களுக்கு 72 வயது ஆகும்போது தயாரிப்பாளர்கள் வரிசையில் நின்றால் நீங்களும் சூப்பர் ஸ்டார் என்று கூறிக்கொள்ளுங்கள்” என்று பேசியது விஜய்யை நேரடியாகவே தாக்கி பேசியது போல் வெளிப்பட்டது.

- Advertisement -

“ஜெயிலர்” படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவை தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் பரபரப்பு பற்றிக்கொண்டுள்ள நிலையில் தற்போது விஜே அபிஷேக் தனது வாயை வைத்துக்கொண்டு சும்மா இல்லாமல் சில வார்த்தைகளை விட்டிருக்கிறார். இது அஜித் ரசிகர்களுக்கு கோபத்தை மூட்டியுள்ளது.

அதாவது, “ரஜினிகாந்திற்கும் விஜய்க்கும் நடுவே இருப்பது ஒரு சுத்தமான பிசினஸ் போட்டி, இந்த போட்டியை வைத்துதான் தமிழ் சினிமா வளர்ந்து வருகிறது. ஆனால் இந்த போட்டியில் இப்போதைக்கு அஜித் கிடையாது” என்று கூறியிருக்கிறார். இதுதான் அஜித் ரசிகர்களை தற்போது கடுப்பில் ஆழ்த்தியிருக்கிறது.

- Advertisement -
- Advertisement -

சற்று முன்