- Advertisement -
Homeபொழுதுபோக்குகோவையில் சூர்யா 45 ஷூட்டிங்கில் இணைந்த முக்கிய நடிகர், நடிப்புல இவர் அதகளம் பண்ணுவாரே? அசந்து...

கோவையில் சூர்யா 45 ஷூட்டிங்கில் இணைந்த முக்கிய நடிகர், நடிப்புல இவர் அதகளம் பண்ணுவாரே? அசந்து போன ரசிகர்கள் – தரமான சம்பவம் செய்த இயக்குனர் ஆர்ஜே பாலாஜி!

- Advertisement -

கங்குவா படத்தை தொடர்ந்து அடுத்து கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்த 44வது படம், ஏப்ரல் 10ம் தேதி வெளியாகும் என்று கூறப்படுகிறது. இந்த படத்துக்கு கல்ட் என டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. ஆனால் நடிகர் முரளி மகன் அதர்வா இயக்கும் ஒரு படத்துக்கு, கல்ட் என்று அவர் முன்பே பெயரை பதிவு செய்திருப்பதாகவும், கல்ட் டைட்டிலை விட்டுத்தர மறுத்துவிட்டதாகவும் சமீபத்தில் தகவல் வெளியானது.

ஏனெனில் அதர்வா இயக்கும் படத்தின் கதைக்கு, கல்ட் என்ற டைட்டில்தான் மிகச் சரியாக இருக்கும். வேறு பெயர் வைத்தால் சரியாக வராது என்பதால், சூர்யா படம் என தெரிந்தும், அவர் கல்ட் பட தலைப்பை தர மறுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. அதனால் வேறு தலைப்பு குறித்து கார்த்திக் சுப்பராஜ் உள்ளிட்ட படக்குழுவினர் ஆலோசித்து வருகின்றனர்.

- Advertisement -

சூர்யா 44 படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில் தற்போது தனது 45வது படத்தின் படப்பிடிப்பில் நடிகர் சூர்யா பங்கேற்றுள்ளார். கடந்த 30ம் தேதி, கோவையை அடுத்துள்ள பொள்ளாச்சி மாசாணியம்மன் கோவிலில் சூர்யா 45 படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கியது. தொடர்ந்து கோவையில் உள்ள அக்ரிகல்சர் யுனிவர்சிடியில் கோவில் ஷெட் அமைக்கப்பட்டு, படப்பிடிப்பு நடந்து வருகிறது.

ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடிக்கும் காட்சிகள் அங்கு படமாக்கப்பட்டு வருகின்றன. இந்த படத்தில் திரிஷா நாயகியாக நடிக்கிறார். ஏஆர் ரகுமான் படத்துக்கு இசையமைக்கிறார். மேலும் இந்த படத்தில் லப்பர் பந்து படத்தில் கெத்து தினேஷ் மனைவியாக நடித்த சுவாசிகா முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். அதனால் இந்த படம் இன்னும் அதிக கவனம் பெற்றது.

- Advertisement -

இந்த சூழலில் தற்போது சூர்யா 45 படத்தில் நடிகர் மற்றும் ஒளிப்பதிவாளர் நட்டி என்கிற நடராஜ் சுப்ரமணியன் நடிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. மிளகா படத்தில் நாயகனாக அறிமுகமான அவர் முத்துக்கு முத்தாக, சதுரங்க வேட்டை, கர்ணன், நம்ம வீட்டுப்பிள்ளை, மகாராஜா, பிரதர், கங்குவா உள்ளிட்ட படங்களில் நடித்து ரசிகர்களின் வரவேற்பை பெற்றவர்.

வில்லன் நடிப்பாக இருந்தாலும், குணச்சித்திர வேடமாக இருந்தாலும் நடிப்பில் தனி முத்திரை பதிக்கும் கலைஞர் நட்டி. யூத் மற்றும் புலி போன்ற விஜய் படங்களுக்கு ஒளிப்பதிவாளராக பணியாற்றியவர். நட்டி இந்த படத்தில் நடிப்பது ரசிகர்களின் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அதனால் சூர்யா 45 படம் வேற லெவலில் இருக்கும் என்று ரசிகர்கள் இப்போதே கூற துவங்கியுள்ளனர்.

- Advertisement -

சற்று முன்