நடிகர் வடிவேலு தமிழ் சினிமாவில் 1990 முதல் 2010 வரை 20 ஆண்டுகளுக்கு மேல் காமெடியில் தனி ராஜ்ஜியமே நடத்தியவர். அந்த காலகட்டத்தில் அவரது காமெடி இல்லாத படங்களே இல்லை என்று கூறலாம். பல படங்கள் அவரது காமெடி காட்சிகளுக்காகவே அதிக நாட்கள் ஓடியதும் மறுக்க முடியாதது. தினம் ரூ. 12 லட்சம் வரை சம்பளமாக வாங்கிய காமெடி நடிகராக இருந்தார்.
ஆனால் ஒரு கட்டத்தில் விஜயகாந்துடன் பிரச்னை திமுகவுக்கு ஆதரவு இயக்குனர் ஷங்கருடன் மோதல் போன்ற காரணங்களால் 10 ஆண்டுகளுக்கு மேல் அவர் சினிமாவில் நடிக்க முடியாத சூழல் ஏற்பட்டது. அந்த காலகட்டத்தில் சந்தானம் சூரி யோகிபாபு சதீஷ் போன்றவர்கள் தமிழ் சினிமாவில் காமெடி நடிப்பில் பிரபலமாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றனர்.
மீண்டும் தமிழ் சினிமாவில் ரீ என்ட்ரி கொடுத்த வைகைப்புயல் வடிவேலு சிவலிங்கா மாமன்னன் சந்திரமுகி 2 உள்ளிட்ட படங்களில் நடித்தார். இதில் மாமன்னன் படத்தில் உதயநிதிக்கு தந்தையாக எம்எல்ஏவாக வடிவேலு நடிப்பு பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. குணச்சித்திர நடிப்பில் வடிவேலு தனி முத்திரை பதித்திருந்தார்.
அதனால் குணச்சித்திர நடிப்புக்கு மாறிவிடுங்கள் என்று சொல்லும் அளவுக்கு அதே போன்ற கேரக்டர்களில் நடிக்க வடிவேலுக்கு பட வாய்ப்புகள் குவிந்தது. இனி காமெடி நடிப்பை விட்டு விலகினால், வருமானம் கால்வாசியாக குறைந்துவிடும் என்பதை உணர்ந்த வடிவேலு, நடித்தால் காமெடிதான் என்று மறுத்துவிட்டார். ஆனால் அவரது காமெடி பழையபடி ரசிகர்களால் ரசிக்க முடியவில்லை.
இந்த சூழலில் நீண்ட இடைவெளிக்கு பிறகு சுந்தர் சி இயக்கத்தில் வடிவேலு சுந்தர் சி இணைந்து நடிக்கும் கேங்கர்ஸ் என்ற படம் உருவாகி உள்ளது. இந்த படத்தில் சுந்தர் சியுடன் படம் முழுக்கவே வடிவேலு நடித்திருக்கிறார். காமெடியில் மீண்டும் தனது பழைய இடத்தை வைகைப்புயல் பிடித்து விடுவார் என்று சொல்லும் அளவுக்கு காமெடியில் ஏகப்பட்ட ரகளை செய்திருக்கிறார் வடிவேலு என்று சொல்லப்படுகிறது.
கேங்கர்ஸ் என்று இந்த படத்தில் கேங்கர்ஸ் குரூப் ஆக நடித்திருப்பதே வடிவேலு தானாம். இந்த படத்தில் மொத்தம் 5 கெட்டப்புகளில் இந்த படத்தில் வடிவேலு வருகிறார். இதில் கிளைமாக்ஸ் காட்சியில் ஆண்ட்டி கெட்டப்பில் வடிவேலு நடித்துள்ளார். இதுவரை பல படங்களில் பெண் வேடங்களில் நடித்த வடிவேலு இந்த படத்திலும் பெண்ணாக வந்து ரசிகர்களை குலுங்க குலுங்க சிரிக்க வைக்கப் போவதாக லேட்டஸ்ட் அப்டேட் வெளியாகி உள்ளது.





