- Advertisement -
Homeபொழுதுபோக்குநேஷனல் க்ரஷ் பட்டம் குறித்து பேசிய நடிகை ராஷ்மிகா மந்தனா, நம்ம லேடி சூப்பர் ஸ்டாரை...

நேஷனல் க்ரஷ் பட்டம் குறித்து பேசிய நடிகை ராஷ்மிகா மந்தனா, நம்ம லேடி சூப்பர் ஸ்டாரை தான் வம்புக்கு இருக்கிறாரா? – ரசிகர்கள் கேள்வி!

- Advertisement -

கீதா கோவிந்தம் படத்தில் விஜய் தேவர கொண்டாவுடன் ஜோடியாக நடித்து பிரபலமானவர் ராஷ்மிகா மந்தனா. புஷ்பா புஷ்பா 2 படங்கள் மூலம் பெரிய அளவில் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றார். இந்தியில் அனிமல் படத்திலும் தாராளமான கவர்ச்சி காட்டி முத்தக்காட்சிகளிலும், படுக்கையறை காட்சிகளிலும் நடித்திருந்தார்.

தமிழில் விஜயுடன் வாரிசு படத்திலும் நடிகர் கார்த்தியுடன் சுல்தான் படத்திலும் நாயகியாக நடித்திருந்தார். சமீபத்தில் சாவா என்ற இந்தி படத்தில் ராஷ்மிகா மந்தனா நடித்திருக்கிறார். அந்த படம் இன்றுதான் ரிலீஸாகி உள்ளது. அல்லு அர்ஜூனுக்கு ராஷ்மிகா ஜோடியாக நடித்த புஷ்பா 2 படம் உலகளவில் 1800 கோடி ரூபாய் வசூலித்திருக்கிறது.

- Advertisement -

இந்நிலையில் நேர்காணல் ஒன்றில் பேசிய நடிகை ராஷ்மிகா மந்தனா கூறியதாவது, நான் இதுவரை 24 படங்களில் நடித்திருக்கிறேன். என்னைவிட அழகான பல கதாநாயகிகள் இருக்கிறார்கள். ஆனால் நான் என்னுடைய வழிகளில் செல்கிறேன். நீங்கள் என்ன படம் எடுக்கிறீர்கள் அது ரசிகர்களுக்கு எப்படி பிடிக்கிறது, அதுதான் அவர்களை டிக்கெட் எடுத்து படம் பார்க்க உதவுகிறது. அதுதான் எனக்கும் சிறப்பாக இருக்கிறது.

சினிமா வாழ்க்கையில் பட்டப் பெயர்கள் உதவுவதில்லை. அது ரசிகர்களின் அன்பினால் கிடைப்பது. அவர்கள் எப்படி அழைக்க விரும்புகிறார்களோ அப்படி அழைப்பார்கள். அது வெறுமனே பெயர்கள் மட்டுமே. எனது ரசிகர்கள் நலம் விரும்பிகளுடன் நான் நல்ல தொடர்பில் இருக்கிறேன். அதை எனது இதயத்துக்கு அருகில் வைத்துள்ளேன். அதை நம்பியே தொடர்ச்சியாக பல இடங்களில் நடிக்கிறேன்.

- Advertisement -

உண்மையைச் சொல்ல வேண்டுமானால் இன்று தென்னிந்தியாவிலும் வட இந்தியாவிலும் நான் பல நிகழ்ச்சிகளில் பங்கேற்க வேண்டும். இது மிகவும் கடுமையானதாக இருக்கிறது. ஆனால் அதே நேரத்தில் எனக்கு எல்லா இடங்களிலும் கிடைக்கும் அன்புக்கு நான் எனது தூக்கத்துக்கு பை பை சொல்ல வேண்டி உள்ளது. ரசிகர்களின் அன்பை நான் எப்போதும் முதன்மையானதாக கருதுகிறேன்.

ஒரே நேரத்தில் இரண்டு மூன்று படங்களில் நடிக்கிறேன். ரசிகர்களுக்காக எதையும் செய்ய தயாராகவும் நான் இருக்கிறேன் என்று ராஷ்மிகா மந்தனா அந்த நேர்காணலில் கூறியிருக்கிறார். 28 வயதாகும் நேஷனல் க்ரஷ் ராஷ்மிகா மந்தனா இதுவரை 24 படங்களில் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படும் நயன்தாராவுக்கு பதிலடி தரும் விதமாக நேஷனல் க்ரஷ் பட்டம் குறித்து ராஷ்மிகா மந்தனா பேசி இருப்பது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

- Advertisement -

சற்று முன்