தமிழ் சினிமாவில் நடிகர் கமல்ஹாசனுக்கு அடுத்தப்படியாக மிகவும் அழுத்தமான திருத்தமான நேர்த்தியான நடிகர் யாரென்றால் அதற்கான 100 சதவீத பதில் சியான் விக்ரம் பெயராக தான் இருக்கும். கமலை போலவே தனது கேரக்டருக்காக மெனக்கெடுபவர், உடலை வருத்திக் கொண்டு நடிப்பவர் நடிகர் விக்ரம்.
சேது படத்துக்காகவும் பிதாமகன் அந்நியன் ராவணன் ஐ மற்றும் காசி படங்களுக்கான பல விதங்களில் தன்னை வருத்திக் கொண்டு நடித்தவர் சியான் விக்ரம். காசி படத்தில் கண் பார்வையற்ற கேரக்டரில் நடித்த போது, இப்படியே கண்களை சுருக்கியபடி இனி நடித்தால் கண் பார்வையே போய்விடும் என டாக்டர்கள் எச்சரித்தும் ரிஸ்க் எடுத்து காசி படத்தில் விக்ரம் நடித்திருந்தார்.
ஆனால் விக்ரம் ரிஸ்க் எடுத்து நடித்த சில படங்கள் மட்டுமே பெரிய அளவில் வரவேற்பை வெற்றியை பெற்றிருக்கின்றன. சில படங்கள் மிக மோசமான தோல்வியை சந்தித்திருக்கின்றன. குறிப்பாக சாமி படம் அளவுக்கு சாமி 2 படம் வெற்றி பெறவில்லை. விக்ரம் நடித்த பல கமர்ஷியல் படங்கள் ரசிகர்களுக்கு பலத்த ஏமாற்றத்தை தந்திருக்கின்றன.
அதில் விக்ரம் இயக்குனர் கே விஸ்நாதன் நடித்த ராஜபாட்டை என்ற படம் மிக மோசமான பிளாப் படமாக அமைந்தது. இந்த படம் குறித்து படத்தின் இயக்குனர் சுசீந்திரன் கூறியதாவது, ராஜபாட்டை ஷூட்டிங் துவங்கிய 10 நாட்களிலேயே இந்த படம் ஓடாது என்று எனக்கு தெரிந்து விட்டது. ஒரு பிலிம் மேக்கராக பார்க்கும் போது அது தானாகவே தெரிஞ்சிடும். அப்படிதான் இந்த படம் ஓடாதுன்னு அந்த வைப்லேயே எனக்கு தெரிந்துவிட்டது.
அப்பவே புரடியூசரை கூப்பிட்டு சொன்னேன். நான் எதிர்பார்த்த திரைப்படம் இங்கு நடக்கலே, வேற ஒரு படம் போயிட்டு இருக்குது. தயவு செய்து படத்தை ஸ்டாப் பண்ணிடலாம், வேற படம் பண்ணலாம் என்று சொன்னேன். ஆனால் புரடியூசர் பயந்துட்டார். ஏற்கனவே செல்வராகவனை வெச்சி படம் பண்ணி 35 நாட்கள் ஷூட்டிங் நடந்து ஏகப்பட்ட நஷ்டம் ஆயிடுச்சு. அதனால் எப்படியாவது படத்தை எடுத்து முடிச்சுடுங்க சார் என்று என்னிடம் கூறிவிட்டார்.
ஒரு படம் ஓடாதுன்னு தெரிஞ்சே அந்த படத்தை எடுக்கும் மனநிலை என்பது ரொம்பவும் டப் ஆன ஒரு மனநிலை. இருந்தாலும் நாம் வெற்றி படமாக்க முயற்சி பண்ணுவோம் என்ற மனநிலையில் எடுத்த படம்தான் ராஜபாட்டை. படம் ஷூட் செய்வதில் ஆர்வம் இருந்தாலும் படத்தின் தரம் நமக்குள் அந்த சந்தேகத்தை கிளப்பிவிடும். அப்போது படம் பற்றிய நம்பிக்கை இருக்காது. டீசர் பார்த்தாலே படம் ஓடாதுன்னு தெரியற மாதிரி, ராஜபாட்டை டீசர் பார்த்த மாதிரி இந்த படம் ஓடாதுன்னு எனக்கு அப்பவே தெரிஞ்சிடுச்சு என்று, இயக்குனர் சுசீந்திரன் அந்த நேர்காணலில் கூறியிருக்கிறார்.





