- Advertisement -
Homeபொழுதுபோக்குஷூட்டிங் ஸ்பாட்டில் சீனியர் நடிகையை கலாய்த்த பிரபல காமெடி நடிகர், பிரச்னையை சமாளிக்க முடியாமல் தவித்த...

ஷூட்டிங் ஸ்பாட்டில் சீனியர் நடிகையை கலாய்த்த பிரபல காமெடி நடிகர், பிரச்னையை சமாளிக்க முடியாமல் தவித்த டைரக்டர் – அவங்க எம்ஜிஆருக்கே ஹீரோயின் ஆச்சே?

- Advertisement -

தமிழ் சினிமாவில் கொடி கட்டி பறந்த பழம்பெரும் நடிகைகளில் ஒருவர்தான் சரோஜாதேவி. அந்த காலத்தில் எம்ஜிஆர் சிவாஜி நடித்த பல படங்களில் சரோஜா தேவி நாயகியாக நடித்திருக்கிறார். குறிப்பாக அன்பே வா படகோட்டி எங்க வீட்டுப்பிள்ளை நீதிக்கு பின் பாசம் போன்ற பல படங்களில் எம்ஜிஆர் சரோஜாதேவி ஜோடி ரசிகர்களை அசத்தியது.

நடிகை சரோஜாதேவிக்கு கன்னடத்து பைங்கிளி என்ற பட்டப் பெயரும் உண்டு. புதிய பறவை படத்தில் தன்னை காதலியாக நடித்து ஏமாற்றும் சரோஜா தேவியிடம், நடிகர் சிவாஜி கணேசன் என்னை காதலித்தது அத்தனையும் நடிப்பா என்று கேட்பதும், அவர் ஆமாம் கோபால் என்று சொல்வதும் இன்றும் இணையத்தில் டிரண்டிங்கில் இருக்கிறது.

- Advertisement -

கடந்த 2009ம் ஆண்டில் அக்டோபர் மாதம் தீபாவளிக்கு வெளியான படம் ஆதவன். கேஎஸ் ரவிக்குமார் இயக்கத்தில் நடிகர் சூர்யா, நயன்தாரா வடிவேலு மனோபாலா ஆனந்தபாபு ரமேஷ் கண்ணா உள்ளிட்டோர் நடித்திருந்த இந்த படத்தில், சீனியர் நடிகை சரோஜா தேவியும் நடித்திருந்தார். சூர்யாவின் அப்பா மலையாள நடிகர் பரத் முரளியின் அம்மா கேரக்டரில் அவர் நடித்திருந்தார்.

நடிகை சரோஜா தேவி குறித்து ஆதவன் படத்தின் கதை திரைக்கதை வசனம் எழுதிய நடிகர் மற்றும் இயக்குனர் ரமேஷ் கண்ணா கூறியதாவது, எனக்கு சின்ன வயதில் இருந்தே நடிகை சரோஜா தேவியை ரொம்பவும் பிடிக்கும். அதனால் சின்ன பையனாக இருந்த போது யாராவது கேட்டால், நான் சரோஜா தேவியை தான் கல்யாணம் பண்ணிக்குவேன் என்று சொல்வேன்.

- Advertisement -

அதனால் ஆதவன் படத்தில் வயதான கேரக்டரில் ஹீரோவின் பாட்டியாக நடிக்க நடிகை சரோஜா தேவியிடம் பேசி கால்ஷீட் வாங்கினோம். அவரும் அந்த படத்தில் சிறப்பாக நடித்திருந்தார். படத்தில் ஒரு காட்சியில், நீ அப்படியே மாடிக்கு போ, அங்க அந்த அம்மா ( சரோஜா தேவி) முகம் முழுவதும் பவுடர் அப்பிட்டு மேக்கப் போட்டுட்டு படுத்திருக்கும் என்ற டயலாக்கை வடிவேலு சொந்தமாக பேசி விட்டார்.

படம் ரிலீஸான பிறகு, எனக்கு போன் செஞ்ச சரோஜா தேவி அம்மா, ரமேஷ் கண்ணா நான் உங்ககிட்ட படத்தில் நடிக்க சான்ஸ் கேட்டேனா, நீங்களா வந்து என்னை கூப்பிட்டு படத்துல நடிக்க வெச்சீங்க, இப்படி எல்லாம் டயலாக் போட்டிருக்கீங்க என்று கோபப்பட்டார். அந்த ஆளு லூசு மாதிரி பேசிட்டான், இதை நீங்க பெருசா தப்பா நினைச்சுக்காதீங்க என்று அவரை சமாதானம் செய்தேன். நான் என்ன மனோரமா மாதிரி காமெடி ஆர்ட்டிஸ்ட்டா, நான் ஒரு ஹீரோயின் என்று அவங்க சொன்னாங்க. எப்படியோ ஒரு வழியா பேசி அந்த பிரச்னையை சமாளிச்சேன் என்று அந்த நேர்காணலில் ரமேஷ் கண்ணா கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்