- Advertisement -
Homeபொழுதுபோக்குமதராஸி என பெயர் வைத்ததற்கு இதுதான் காரணம்... கிளைமாக்ஸ் சூட்டிங் இன்னும் இருக்கு... சிவகார்த்திகேயன் படம்...

மதராஸி என பெயர் வைத்ததற்கு இதுதான் காரணம்… கிளைமாக்ஸ் சூட்டிங் இன்னும் இருக்கு… சிவகார்த்திகேயன் படம் குறித்து மனம் திறந்த ஏ ஆர் முருகதாஸ்…

- Advertisement -

ஏ ஆர் முருகதாஸ் தற்போது இரண்டு திரைப்படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். இதில் ஒரு திரைப்படம் சிவகார்த்திகேயனை வைத்து எடுக்கப்பட்டு வருகிறது. இதனை உருவாக்கும் போதே அவருக்கு பாலிவுட்டில், சல்மான் கானை வைத்து இயக்கும் வாய்ப்பு கிடைத்தது. உடனடியாக பணிகள் தொடங்க வேண்டும் என்பதால், அங்கு சென்றார் ஏ ஆர் முருகதாஸ்.

இந்த திரைப்படத்திற்கு சிக்கந்தர் என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக வருகிறார். மும்பையில் சூட்டிங் விறுவிறுப்பாக நடத்தி வருகிறார் முருகதாஸ். வரும் ரம்ஜானுக்கு படம் வெளியாகும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்ததால், பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன.

- Advertisement -

இதன் நடுவே சிவகார்த்திகேயனுடன் முருகதாஸ் பணிபுரிந்து வரும் படத்திற்கு, மதராசி என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இதன் டைட்டில் டீசர் அண்மையில் வெளியாகி பலரது கவனத்தையும் ஈர்த்தது. இதில் அடர்ந்த தாடியுடன் வித்தியாசமாக காட்சியளிக்கிறார் சிவகார்த்திகேயன். ஆக்சன் பாணியில் இந்த திரைப்படம் எடுக்கப்பட்டிருப்பது அதன் டீசரை பார்க்கும்போதே தெரியவந்தது.

இதில் கதாநாயகியாக ருக்மணி வசந்த் நடிக்கிறார். வித்யூட் ஜமால், விக்ராந்த் உள்ளிட்டோரும் நடித்துள்ளார்கள். அனிருத் இசையமைத்து வருகிறார். இந்த நிலையில் மதராஸி திரைப்படம் குறித்த பல்வேறு சுவாரசியமான தகவல்களை பகிர்ந்திருக்கிறார் ஏ ஆர் முருகதாஸ். இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது,

- Advertisement -

மதராசி திரைப்படத்தின் கதை, வட இந்தியர்களின் பார்வையில்தான் தொடங்கும். அவர்கள் மதராசி என்று குறிப்பிடுவது போலவே இந்த தலைப்பை வைத்திருக்கிறோம். இது சிவகார்த்திகேயனுக்கு அடுத்த லெவல் ஆக்சன் திரைப்படமாக இருக்கும். அத்துடன் ஒரு அழகான காதல் கதையும் இதில் இருக்கிறது.

மதராசி திரைப்படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிவடைந்து விட்டது. இறுதிக்காட்சிக்காக 12 நாட்கள் மட்டுமே படப்பிடிப்பு நடத்தப்பட உள்ளது. கண்டிப்பாக ரசிகர்களையும் பொதுமக்களையும் இந்த திரைப்படம் திருப்திப்படுத்தும். எப்படி கஜினி படத்தில் ஒரு கதாபாத்திரம், துப்பாக்கி திரைப்படத்தில் ஸ்லீப்பர் செல் ஆகியவை கொண்டுவரப்பட்டதோ அதுபோல் இந்த திரைப்படத்திலும் ஒரு விஷயம் இருக்கிறது என்று தெரிவித்துள்ளார் இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ்.

- Advertisement -

சற்று முன்