- Advertisement -
Homeபொழுதுபோக்குசூட்டோடு சூட்டாக தொடங்கும் சூர்யாவின் 46வது திரைப்பட சூட்டிங்... மமீதா பைஜூ தவிர மேலும் மூத்த...

சூட்டோடு சூட்டாக தொடங்கும் சூர்யாவின் 46வது திரைப்பட சூட்டிங்… மமீதா பைஜூ தவிர மேலும் மூத்த பெண் நடிகைகள் இருவர் உள்ளார்களா…

- Advertisement -

சூர்யா நடிப்பில் கடந்த ஒன்றாம் தேதி வெளியான ரெட்ரோ திரைப்படம் கலவையான விமர்சனத்தை பெற்றது. கார்த்திக் சுப்புராஜ் இதனை இயக்கி இருந்தார். பூஜா ஹெக்டே கதாநாயகியாக வந்தார். படத்திலிருந்து ஏற்கனவே வெளியான கனிமா பாடல் பட்டித்தொட்டி எங்கும் ஹிட் அடித்தது. திரையரங்கையும் சேர்த்து ஒட்டுமொத்த வசூலாக இந்த திரைப்படம் 235 கோடி ரூபாய் ஈட்டி உள்ளது.

இதனைத் தொடர்ந்து தனது 45வது திரைப்படத்தில் தீவிர கவனம் செலுத்தி வருகிறார் சூர்யா. ஆர்ஜே வாக இருந்து, காமெடி நடிகராக மாறி இயக்குனராக அவதாரம் எடுத்திருக்கும் ஆர் ஜே பாலாஜிதான் இதனை இயக்கி வருகிறார். ஏற்கனவே இவர் சரவணன் என்பவருடன் இணைந்து மூக்குத்தி அம்மன் திரைப்படத்தை இயக்கியிருந்தார்.

- Advertisement -

இதேபோல் எல்கேஜி திரைப்படமும் அவரது இயக்கத்தில்தான் உருவானது. இப்படி இருக்க தற்போது சூர்யாவை வைத்து அவர் ஆன்மீகம் கலந்த ஃபேண்டஸி திரைப்படத்தை எடுத்து வருகிறார். இதில் சூர்யாவுக்கு இரண்டு கதாபாத்திரம் என்று கூறப்படுகிறது. ஒன்று வழக்கறிஞர் கதாபாத்திரம் என்பது நம் அனைவரும் தெரிந்ததுதான்.

மற்றொன்று கருப்பசாமி வேடத்தில் அவர் நடிப்பதாக சொல்லப்படுகிறது. படத்திற்கும் வேட்டை கருப்பு என்றுதான் பெயர் வைத்திருக்கிறார்களாம். திரிஷாவும் படத்தில் வழக்கறிஞராகவே வருகிறார். சுவாசிகா, மலையாள நடிகர் இந்திரன், யோகி பாபு, நட்டி உள்ளிட்டோரும் இந்த திரைப்படத்தில் இடம் பெற்று இருக்கிறார்கள்.

- Advertisement -

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் இதன் முதற்கட்ட படப்பிடிப்பை நடத்தினார்கள். அங்குள்ள மாசாணியம்மன் கோவிலில்தான் இதன் சூட்டிங் தொடங்கியது. ஏற்கனவே மாசாணி அம்மன் என்னும் பெயரில் திரிஷாவை வைத்து ஒரு திரைப்படத்தை இயக்க ஆர் ஜே பாலாஜி திட்டமிட்டதாகவும், தற்போது அதன் வடிவம்தான் மாறி சூர்யாவிற்கு இந்த படம் சென்று இருப்பதாகவும் சொல்கிறார்கள். ஆறு மாதங்களாக நடைபெற்று வரும் இதன் படப்பிடிப்பு தற்போது இறுதி கட்டத்தை எட்டி இருக்கிறது.

இதனைத் தொடர்ந்து சூட்டோடு சூட்டாக தனது அடுத்த திரைப்படத்தின் வேலைகளையும் ஆரம்பித்து விட்டார் சூர்யா. அவரது 46வது திரைப்படமாக உருவாகும் இதனை லக்கி பாஸ்கர் படத்தை எடுத்த வெங்கி அட்லூரி இயக்குகிறார். கதாநாயகியாக மமீதா பைஜூ நடிக்க, அதுபோக ரவீனா டாண்டன், ராதிகா சரத்குமார் உள்ளிட்டோர் இடம்பெற்று இருக்கிறார்கள். வரும் வெள்ளிக்கிழமை இதன் படப்பிடிப்பு தொடங்கி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

- Advertisement -

சற்று முன்