நடிகர் அஜீத்குமார் தமிழ் சினிமாவில் டாப் ஸ்டார் நடிகராக இருக்கிறார். விடாமுயற்சி படத்தை தொடர்ந்து அவர் நடித்த குட் பேட் அக்லி படம் வருகிற ஏப்ரல் 10ம் தேதி ரிலீஸாகிறது. இப்போது நடிகர் அஜீத்குமார் ஜெர்மனியில் நடந்த வரும் கார் பந்தயத்தில் பங்கேற்று வருகிறார். வரும் அக்டோபர் மாதம் வரை இந்த கார் ரேஸ் போட்டிகளில் அவர் பங்கேற்க உள்ளார்.
நடிகர் அஜீத்குமார் நடிகை ஷாலினியை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். பேபி ஷாலினி ஆக குழந்தை நட்சத்திரமாக பல படங்களில் நடித்த அவர், காதலுக்கு மரியாதை படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக நடித்து நாயகியாக அறிமுகமானார். தொடர்ந்து பல படங்களில் நடித்தார்.
சரண் இயக்கத்தில் அஜீத்குமார் நடித்த படம் அமர்க்களம். இந்த படத்தில் ஷாலினி அம்பிகா ரகுவரன் நாசர் தாமு வையாபுரி வினுசக்ரவர்த்தி உள்ளிட்ட பலர் நடித்தனர். இந்த படம் பெரிய அளவில் வெற்றி பெற்றது. இந்த படத்தில் காலம் கலிகாலம் ஆகிப்போச்சுடா என்ற பாடல் காட்சியில் நடிகர் ராகவா லாரன்ஸ் டான்ஸ் மாஸ்டராக அறிமுகமானார்.
அமர்க்களம் படத்தில் நடித்த போது அஜீத்குமார் ஷாலினி இருவருக்கும் இடையில் காதல் ஏற்பட்டது. பிறகு இருவரும் காதல் திருமணம் செய்துக்கொண்டனர். திருமணத்துக்கு பிறகு ஷாலினி நடிப்பதில்லை. இந்த நட்சத்திர தம்பதிக்கு ஒரு மகன் ஒரு மகள் உள்ளனர்.
இந்நிலையில் சினிமாவில் பிஆர்ஓ ஆக உள்ள நிகில் முருகன் சமீபத்தில் ஒரு நேர்காணலில் கூறியதாவது, அஜீத்குமார் ஷாலினி திருமண வரவேற்பு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்யும் பிஆர்ஓ வாக நான் இருந்தேன். தாஜ் கன்னிமாரா ஓட்டலில் அவர்களது ரிசப்ஷன் நடந்தது. வழக்கமாக நடிகர், நடிகைகள் திருமண விழாவுக்கு வரும் விஐபிகளின் கார் டிரைவர்கள், அவர்களை ஓட்டல் வாசலில் இறக்கி விட்டுவிட்டு கார் பார்க்கிங் பகுதியில் சாப்பிடாமல் காத்திருப்பார்கள். அவர்களுக்கு உணவு பார்சல், தண்ணீர் பாட்டல் தரலாமா என அஜீத்குமாரிடம் அனுமதி கேட்டேன்.
அஜீத்குமாரும் நல்ல யோசனை, செய்யுங்கள் என்று கூறிவிட்டார். ஆனால் அந்த ஓட்டல் நிர்வாகம் அதற்கு அனுமதிக்கவில்லை. இதுகுறித்து நடிகர் அஜீத்குமாரிடம் நான் சொன்ன போது, எந்த ஓட்டலில் அதற்கு அனுமதி தருகிறார்களோ, அங்கு ரிசப்ஷனை மாற்றி விடுங்கள் என்று உடனே சொல்லி விட்டார். அதன்பிறகுதான் அந்த ஓட்டல் அனுமதி தந்தது என்று பிஆர்ஓ நிகில் முருகன் அந்த நேர்காணலில் கூறியிருக்கிறார். இதைக் கேட்ட அஜீத்குமார் ரசிகர்கள், உள்ளம் குளிர்ந்துபோய் அவரை பாராட்டி வருகின்றனர்.





