- Advertisement -
Homeபொழுதுபோக்குஅடேங்கப்பா… உற்சாகத்தில் துள்ளிக் குதித்த ரசிகர்கள் - ரூ. 100 கோடி வசூலை கடந்த டிராகன்...

அடேங்கப்பா… உற்சாகத்தில் துள்ளிக் குதித்த ரசிகர்கள் – ரூ. 100 கோடி வசூலை கடந்த டிராகன் படம், ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு வந்தாச்சு!

- Advertisement -

இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் கடந்த மாதம் 21ம் தேதி வெளியான படம் டிராகன். லவ் டுடே படத்துக்கு பிறகு பிரதீப் ரங்கநாதன் நாயகனாக நடித்த இந்த படம் மாபெரும் வெற்றிப் படமாக ரூ. 100 கோடி வசூலை கடந்து திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது.

உலகம் முழுவதும் ரூ. 100 கோடி வசூலை கடந்த டிராகன் படம், தமிழ்நாட்டில் மட்டுமே ரூ. 75 கோடி வசூலை கடந்துள்ளது. படம் ரிலீஸான கடந்த 21ம் தேதி முதல் கடந்த 10 நாட்களாக தினமும் ரூ. 8 கோடி வரை தமிழ்நாட்டில் மட்டுமே வசூல் சாதனை செய்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

வழக்கமாக மற்ற படங்கள் எல்லாம் சனி ஞாயிறு தினங்களில் தியேட்டர்களில் வசூல் கணிசமாக அதிகரித்தும் வாரத்தின் மற்ற நாட்களில் வசூல் வெகுவாக குறைவதும்தான் வழக்கம் என்ற நிலையில் டிராகன் படம் மட்டும் வாரத்தின் மற்ற நாட்களிலும் சனி ஞாயிறு தினங்களிலும் ஒரே மாதிரியான நிலையான வசூலில் தொடர்ந்து இருந்து வருவதால் இன்னும் சில தினங்களில் தமிழ் நாட்டிலேயே இந்த படம் ரூ. 100 கோடி வசூலை கடந்துவிடும் என்று சொல்லப்படுகிறது.

ஓ மை கடவுளே படத்தை இயக்கிய அஸ்வத் மாரிமுத்துவுக்கு இது 2வது படம். கோமாளி படத்தை இயக்கிய பிரதீப் ரங்கநாதனுக்கும் அவர் ஹீரோவாக நடித்த 2வது படம் டிராகன் என்பதும் கவனிக்கத்தக்கது. அடுத்து நடிகை நயன்தாராவின் கணவர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்த லைக் படமும் திரைக்கு வர இருப்பது குறிப்பிடத்தக்கது.

கல்லூரி கதைக்களத்தில் உருவான டிராகன் படத்தில் காதல், நண்பர்களின் ஜாலியான கலாட்டா, பெற்றோர் சென்டிமென்ட் ஆகிய விஷயங்கள் மட்டுமின்றி படத்தின் பல காட்சிகளின் கல்வியின் அவசியத்தை உணர்த்தும் காட்சிகளையும் வைத்து இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து ஜெயித்திருக்கிறார். குறிப்பாக இயக்குனர் மிஷ்கின் கேரக்டர், இந்த படத்துக்கு பெரிய பக்கபலமாக இருந்திருக்கிறது.

டிராகன் படம் கடந்த மாதம் 21ம் தேதி வெளியான நிலையில், 2 வது வாரத்தின் இறுதியில் உள்ளது. வருகிற 27ம் தேதி வீர தீர சூரன் வரும் வரை இந்த படமே தமிழ்நாட்டில் பெரும்பாலான தியேட்டர்களில் ஓடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சூழலில் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் டிராகன் படம் வருகிற 21ம் தேதி ரிலீஸ் ஆக உள்ளதாக தகவல் வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.

சற்று முன்