- Advertisement -
Homeபொழுதுபோக்குநடிகர் சிங்கமுத்து அவதூறாக பேசிய விவகாரம், வழக்கு விசாரணைக்கு கோர்ட்டில் ஆஜரான நடிகர் வடிவேலு -...

நடிகர் சிங்கமுத்து அவதூறாக பேசிய விவகாரம், வழக்கு விசாரணைக்கு கோர்ட்டில் ஆஜரான நடிகர் வடிவேலு – மாஸ்டர் கோர்ட் போட்ட உத்தரவு!

- Advertisement -

தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக இருந்தவர் வடிவேலு. வைகைப்புயல் வடிவேலு என்று ரசிகர்களால் அழைக்கப்பட்ட அவருடன், பல படங்களில் காமெடி காட்சிகளில் இணைந்து நடித்தவர் காமெடி நடிகர் சிங்கமுத்து. அவர்கள் இருவரும் இணைந்து நடித்த பல காமெடி காட்சிகள் பெரிய அளவில் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றவை.

ஆனால் ஒரு கட்டத்தில் நடிகர் வடிவேலுவுக்கும், நடிகர் சிங்கமுத்துவுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. வடிவேலுவுக்கு நிலங்களை விலைக்கு வாங்கி தந்த வகையில், தன்னை மோசடி செய்துவிட்டதாக நடிகர் சிங்கமுத்து மீது வடிவேலு வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கு விசாரணை தனியாக நடந்து வருகிறது.

இதற்கிடையே கடந்த 2010ம் ஆண்டு முதல் 2020ம் ஆண்டு வரை 10 ஆண்டுகளுக்கு மேலாக நடிகர் வடிவேலு, பல்வேறு பிரச்னைகளால் சினிமாவில் நடிக்காமல் ஒதுங்கி இருந்தார். திமுகவுடன் நெருக்கம், நடிகர் விஜயகாந்துடன் ஏற்பட்ட பிரச்னை, இயக்குனர் ஷங்கருடன் தகராறு என பல பிரச்னைகள் இதற்கு காரணமாக சொல்லப்பட்டது.

இந்நிலையில் யூடியூப் சேனல்களில் பல்வேறு நேர்காணல்களில் கலந்துக்கொண்ட நடிகர் சிங்கமுத்து, நடிகர் வடிவேலு குறித்து கடுமையாக விமர்சித்து பேசினார். ஷூட்டிங் ஸ்பாட்களில் வடிவேலு சக நடிகர், நடிகைகளிடம் நடந்துக்கொள்ளும் விதம் குறித்து பல விஷயங்களை வெளிப்படையாக சொன்னார். இது இணையத்தில் வைரலானது.

இதையடுத்து நடிகர் வடிவேலு, தன்னைப் பற்றி அவதூறாக யூடியூப் சேனல்களில் பேசியதற்காக ரூ. 5 கோடி மான நஷ்ட ஈடு வழங்க நடிகர் சிங்கமுத்துவுக்கு உத்தரவிட கோரியும், தன்னைப் பற்றி அவதூறாக பேச அவருக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் நடிகர் வடிவேலு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணையில் வடிவேலுவுக்கு எதிராக பேசிய கருத்துக்களை வாபஸ் பெற்றுக் கொள்வதாகவும், இனிமேல் அவரை அவதூறாக பேச மாட்டேன் என்றும் சிங்கமுத்து தெரிவித்திருந்தார்.

இந்த வழக்கு மாஸ்டர் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்ட நிலையில், சாட்சி விசாரணைக்காக நடிகர் வடிவேலு நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார். அப்போது நடிகர் சிங்கமுத்து தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், நடிகர் வடிவேலுவிடம் குறுக்கு விசாரணை நடத்த அனுமதிக்குமாறு கோரிக்கை விடுத்தார், இதையடுத்து இந்த வழக்கு தொடர்பாக உயர்நீதிமன்றத்திற்கு சென்று முறையிட்டுக் கொள்ளுமாறு இரு தரப்பினருக்கும் மாஸ்டர் நீதிமன்றம் உத்தரவிட்டது. வடிவேலுவிடம் குறுக்கு விசாரணை நடத்துவது குறித்து உயர்நீதிமன்றம்தான் முடிவு எடுக்கும் என்றும் மாஸ்டர் நீதிமன்றம் தெரிவித்தது.

சற்று முன்