- Advertisement -
Homeபொழுதுபோக்குபொறுத்து பொறுத்து பார்த்து கடைசியில் பொங்கி எழுந்த இயக்குனர் வெங்கட்பிரபு - கடைசியில் அந்த சப்ஜெக்டை...

பொறுத்து பொறுத்து பார்த்து கடைசியில் பொங்கி எழுந்த இயக்குனர் வெங்கட்பிரபு – கடைசியில் அந்த சப்ஜெக்டை கையில் எடுத்துட்டாரே?

- Advertisement -

இசைஞானி இளையராஜாவின் தம்பி கங்கை அமரன். துவக்கத்தில் அண்ணன் இளையராஜாவுடன் பல நூறு படங்களுக்கு அவருடன் பணிபுரிந்தவர். ஒரு கட்டத்தில் இயக்குனராக, இசையமைப்பாளராக பாடல் ஆசிரியராக பாடகராக தமிழ் சினிமாவில் பல வெற்றிப் படங்களை கொடுத்தவர் கங்கை அமரன். கரகாட்டக்காரன் படத்தின் இயக்குனர் அவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

கங்கை அமரனின் மகன்தான் வெங்கட்பிரபு. இவர் உன்னை சரணடைந்தேன் ஏப்ரல் மாதத்தில் சிவகாசி உள்ளிட்ட படங்களில் நடித்தார். ஆனால் நடிப்பில் ரசிகர்களிடம் பெரிய வரவேற்பை பெற முடியாத நிலையில், வெங்கட்பிரபு திடீரென இயக்குனராக மாறினார். கடந்த 2007ம் ஆண்டில் சென்னை 28 என்ற படத்தை இயக்கினார்.

ஜெய் மிர்சி சிவா நிதின் சத்யா அரவிந்த் ஆகாஷ் அஜய் ராஜ் விஜய் வசந்த் பிரேம்ஜி இளவரசு சம்பத்குமார் விஜயலட்சுமி உள்ளிட்டோர் நடித்த இந்த படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. சென்னையில் லோக்கல் கிரிக்கெட் விளையாடும் இளைஞர்களை பற்றிய இந்த கதை பெரிய அளவில் ரசிகர்களின் வரவேற்பை பெற்றது.

இதன் தொடர்ச்சியாக 2016ம் ஆண்டில் சென்னை 28 படத்தின் 2ம் பாகத்தை இயக்குனர் வெங்கட்பிரபு டைரக்ட் செய்தார். முதல் படத்தில் நடித்தவர்களில் ஒரு சிலர் தவிர மற்ற அனைவரும் இந்த படத்திலும் நடித்திருந்தனர். முதல் படம் அளவுக்கு இந்த படம் பெரிய வரவேற்பை கவனிப்பை பெறவில்லை என்றாலும் படம் பிளாப் ஆகவில்லை.

சென்னை 28 படத்தின் வெற்றிக்கு பிறகு சரோஜா கோவா மங்காத்தா மாநாடு உள்ளிட்ட பல படங்களை இயக்கிய இயக்குனர் வெங்கட்பிரபு கடைசியாக இயக்கிய படம் தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல்டைம். ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் தயாரித்த இந்த படத்தில் விஜய் 2 வேடங்களில் நடித்திருந்தார். கடந்தாண்டில் வெளியான இந்த படம் ரூ. 445 கோடி வசூலித்து முதலிடம் பெற்றது.

தி கோட் படத்துக்கு பிறகு சிவகார்த்திகேயன் படத்தை இயக்க வெங்கட்பிரபு ஏற்கனவே கமிட் ஆகியிருந்தார். ஆனால் 2 ஆண்டுகள் காத்திருக்குமாறு எஸ்கே சொல்லி விட்டார். அஜீத்குமார் படத்தை இயக்கவும் தற்போதைக்கு வாய்ப்பில்லை. எந்த தயாரிப்பாளரும் தனது படத்தை தயாரிக்க முன்வராத நிலையில், இப்போது சென்னை 28 படத்தின் 3ம் பாகத்தை இயக்க வெங்கட்பிரபு தயாராகி விட்டார். இதில் ஜெய் மிர்சி சிவா உள்ளிட்டோர் மீண்டும் நடிக்க இருப்பதாக தெரிய வந்துள்ளது.

சற்று முன்