- Advertisement -
Homeபொழுதுபோக்குமணிகண்டன் படங்களில் நடிக்கும் நாயகிகள் அந்த மொழி தெரிந்தவர்களாக இருக்க இப்படி ஒரு காரணமா? -...

மணிகண்டன் படங்களில் நடிக்கும் நாயகிகள் அந்த மொழி தெரிந்தவர்களாக இருக்க இப்படி ஒரு காரணமா? – அவரே கொடுத்த ஓபன் ஸ்டேட்மென்ட்

- Advertisement -

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகராக மணிகண்டன் நல்ல படங்களில் நடித்து வருகிறார். இதுவும் கடந்து போகும் காலா ஜெய்பீம் படங்களை தொடர்ந்து அவர் நடித்த குட்நைட் லவ்வர் படங்களும் பெரிய அளவில் வரவேற்பை பெற்றன. சமீபத்தில் வெளியான குடும்பஸ்தன் படமும் மாஸ் ஹிட் படமாக அமைந்தது.

யதார்த்தமான கதைக்களத்தில் அழுத்தமான நடிப்பை வெளிப்படுத்தும் கதைகளை தேர்வு செய்து மணிகண்டன் நடித்து வருகிறார். அதே நேரத்தில் தனக்கு கிடைக்கும் வெற்றிகளை, ரசிகர்கள் தரும் ஆதரவை பார்த்து, தனது இமேஜ் குறித்து எந்த பெருமையும் கொள்ளாத சாதாரண கலைஞனாக தன்னை அவர் வெளிப்படுத்தி கொண்டிருப்பதும் ஷூட்டிங் ஸ்பாட்டில் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

வழக்கமாக ஒரு படம் வெற்றிப் படமாக இருந்து விட்டாலே ஷூட்டிங் ஸ்பாட்டில் அலப்பரை, ஓவர் பந்தா பலவிதமான கண்டிசன்களை போடும் சில இளம் நடிகர்களுக்கு மத்தியில், இன்னும் தன்னை மிக சாதாரண மனிதராக யதார்த்தமானவராக, தன் இயல்பு மாறாமல் பைக்கில் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு மணிகண்டன் வந்து செல்வது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் அவர் நடித்த படங்களில் இதுவரை தெலுங்கு மொழி பேசும் நாயகிகளே அவருக்கு ஜோடியாக நடித்திருக்கின்றனர். குறிப்பாக லவ்வர் குட்நைட் குடும்பஸ்தன் போன்ற படங்களில் மணிகண்டனுக்கு ஜோடியாக நடித்த நாயகிகள் தெலுங்கு மொழி பேசுபவர்கள் என்ற தகவல் வெளியாகி உள்ளது. இனி அவர் நடிக்க உள்ள அடுத்த படத்திலும் தெலுங்கு மொழி பேசும் நாயகிதான் நடிக்க உள்ளார்.

இதுகுறித்து நேர்காணல் ஒன்றில் கேட்ட கேள்விக்கு நடிகர் மணிகண்டன் கூறியதாவது, என்னுடைய பால்ய கால நண்பன் தெலுங்கு மொழி பேசுபவன். டப்பிங் ஆர்ட்டிஸ்ட். அவன் வீட்டுக்கு அடிக்கடி சென்று வந்ததால் சின்ன வயதிலேயே எனக்கு தெலுங்கு மொழி நன்றாக தெரியும். அதுமட்டுமின்றி டப்பிங் ஆர்ட்டிஸ்ட் ஆக நான் இருந்த போது, நிறைய படங்களுக்கு தெலுங்கு டப்பிங் பேசியிருக்கிறேன். தெலுங்கு டப்பிங் ஸ்கிரிப்ட் நிறைய எழுதி இருக்கிறேன்.

அதனால் எனக்கு தெலுங்கு தெரியும் என்பதற்காக, அந்த வசதிக்காக என்னுடன் நடிக்கும் நாயகிகள் தெலுங்கு மொழி பேசுபவர்களாக இருக்க வேண்டும் என்று நான் நினைத்ததும் இல்லை. அப்படி ஒரு எதிர்பார்ப்போ எண்ணமோ எனக்கு இல்லை. ஆனால் அப்படி ஒரு விஷயம் என் படங்களில் தானாகவே அமைகிறது. இயக்குனர்தான் என் படங்களில் கதாநாயகியை தேர்வு செய்கின்றனர். அதற்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று நடிகர் மணிகண்டன் கூறியிருக்கிறார்.

சற்று முன்