- Advertisement -
Homeபொழுதுபோக்குவரும் 14ம் தேதி கூலி படம் டீசர் ரிலீஸ்; இந்த நாளை செலக்ட் பண்ண 2...

வரும் 14ம் தேதி கூலி படம் டீசர் ரிலீஸ்; இந்த நாளை செலக்ட் பண்ண 2 முக்கிய காரணங்கள் இருக்கு – வாவ்… அப்படியா என ஆச்சரியப்பட்ட ரஜினி ரசிகர்கள்!

- Advertisement -

நடிகர் ரஜினிகாந்த் நடித்த படம் ரிலீஸ் என்றாலே அந்த நாள் தமிழ்நாட்டில் சினிமா ரசிகர்களுக்கு தீபாவளி பொங்கல் போல பண்டிகை நாள் போல்தான் விசேஷ தினமாக இருக்கிறது. அதுவும் முதன் முறையாக லோகேஷ் கனகராஜ் ரஜினிகாந்த் காம்போவில் கூலி படம் உருவாகி இருக்கிறது. சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது.

கடந்தாண்டில் வெளியான லால் சலாம் வேட்டையன் என்ற இரண்டு படங்களில் ரஜினிகாந்த் நடித்திருந்தார். லால் சலாம் படம் டாக்குமென்ட்ரி படம் போல இருந்ததால், அந்த படம் ரஜினி ரசிகர்களுக்கே பிடிக்கவில்லை. இதுவரை அந்த படம் ஓடிடி தளத்தில் ரிலீஸ் ஆகவில்லை என்பது கவனிக்கத்தக்கது. ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா தான் அந்த படத்தை டைரக்ட் செய்திருந்தார்.

- Advertisement -

ஜெய்பீம் பட இயக்குனர் தசெ ஞானவேல் இயக்கத்தில் உருவான வேட்டையன் படத்தில் ரஜினியுடன் பகத் பாசில் அமிதாப் பச்சன் ராணா டகுபதி அபிராமி மஞ்சுவாரியார் துஷாரா விஜயன் என பலர் நடித்திருந்தும் அந்த படம் பெரிய அளவில் ரசிகர்களை கவரவில்லை. என்கவுண்டர் எஜூகேஷன் மாபியா என 2 சப்ஜெக்ட்டுகளை படத்தில் கொண்டு வந்தும் ரசிகர்களை ஈர்க்கவில்லை.

மாநகரம் விக்ரம் கைதி மாஸ்டர் லியோ படங்களை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் ரஜினியை வைத்து இயக்கும் படம் கூலி. இதில் லியோ படம் ரசிகர்களுக்கு திருப்தி தரவில்லை. மாஸ்டர் படமும் பெரிய அளவில் ரசிகர்களை கவரவில்லை. ஆனால் விக்ரம் கைதி படங்கள் கமல் கார்த்திக்கு பெரிய திருப்புமுனையை ஏற்படுத்திய படங்களாக இருந்தன.

- Advertisement -

இந்நிலையில் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வரும் 14ம் தேதி கூலி படத்தின் டீசர் வெளியாக உள்ளது. அன்று கூலி படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜின் பிறந்த நாள் என்பதால் அன்று கூலி படம் டீசர் வெளியிடப்படுவதாக தகவல் வெளியான நிலையில், அன்று வேறு ஒரு முக்கிய நாளாகவும் இருப்பது இப்போது தெரிய வந்துள்ளது.

கடந்த 50 ஆண்டுகளுக்கு முன், கர்நாடகாவில் இருந்து தமிழ்நாட்டுக்கு சினிமாவில் நடிக்க வந்தவர் சிவாஜி ராவ் கெய்ட்வாட். அவருக்கு அந்த பெயரை மாற்றிவிட்டு ரஜினிகாந்த் என பெயர் சூட்டியவர் இயக்குனர் கே பாலசந்தர். ரஜினிகாந்த் என்ற பெயருடன் அபூர்வ ராகங்கள் படத்தில் நடித்து ரசிகர்களுக்கு அறிமுகமானார். அப்படி ரஜினிகாந்த் என கே பாலசந்தர் பெயர் சூட்டிய நாள்தான் மார்ச் 14 என்பதால், அந்த சிறப்பு நாளில் கூலி படம் டீசர் ரிலீஸ் செய்யப்படுவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

- Advertisement -

சற்று முன்