- Advertisement -
Homeபொழுதுபோக்குபேட்ட பட இயக்குனருடன் மீண்டும் கை கோர்க்க தயாரான சூப்பர் ஸ்டார் - படத்தோட பட்ஜெட்...

பேட்ட பட இயக்குனருடன் மீண்டும் கை கோர்க்க தயாரான சூப்பர் ஸ்டார் – படத்தோட பட்ஜெட் இத்தனை கோடியா? – லேட்டஸ்ட் அப்பேட் வந்தாச்சு!

- Advertisement -

கடந்த பல ஆண்டுகளாக நடிகர் ரஜினிகாந்த் புது பார்மூலா ஒன்றை பின்பற்றி வருகிறார். அதாவது சூப்பர் ஹிட் படங்களை தரும் இளம் இயக்குனர்களுக்கு தனது அடுத்த படத்தை இயக்கும் வாய்ப்பை தந்து விடுகிறார். அப்படி தரும்போது அந்த படங்கள் பெரும்பாலும் பெரிய வெற்றியை பெற்று விடுகின்றன. அதற்கு முக்கிய காரணம், அந்த இளம் இயக்குனர்கள் ரஜினிகாந்தின் தீவிர ரசிகர்களாக இருக்கின்றனர்.

அந்த வகையில் பா ரஞ்சித் இயக்கிய கபாலி காலா படங்கள், கார்த்திக் சுப்பராஜ் இயக்கிய பேட்ட படம் நெல்சன் இயக்கிய ஜெயிலர் படம் பெரிய வரவேற்பை பெற்றன. இனி அடுத்ததாக வர உள்ள கூலி படம் பெரிய எதிர்பார்ப்பில் உள்ளது. அதே நேரத்தில் சிறுத்தை சிவா இயக்கிய அண்ணாத்த தசெ ஞானவேல் இயக்கிய வேட்டையன் ஏஆர் முருகதாஸ் இயக்கிய தர்பார் படங்கள் பெரிய வரவேற்பை பெறவில்லை.

கடந்த 2019ம் ஆண்டில் ஜனவரி 10ம் தேதி வெளியான படம் பேட்ட. கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் மற்றும் திரிஷா சிம்ரன் மாளவிகா மோகனன் சசிக்குமார் பாபி சிம்ஹா இயக்குனர் மகேந்திரன் முனீஸ்காந்த் குரு சோமசுந்தரம் நவாசுதீன் சித்திக் உள்ளிட்டோர் நடித்த இந்த படம் பெரிய வெற்றியை பெற்றது. ரஜினி கல்லூரி ஹாஸ்டல் வார்டனாகவும் பிளாஸ்பேக்கில் பேட்ட கேரக்டரிலும் நடித்து அசத்தியிருந்தார்.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் அனிருத் இசையில் உருவான இந்த படம் ரஜினி ரசிகர்களுக்கு மிகப்பெரிய விருந்தாக அமைந்தது. கார்த்திக் சுப்பராஜ் சூப்பர் ஸ்டாரின் தீவிர ரசிகர் என்பதால் காட்சிக்கு காட்சி ரஜினியை மாஸ் ஆக காட்டியிருந்தார். இப்போது மீண்டும் 2வது முறையாக கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்க உள்ளதாக லேட்டஸ்ட் தகவல் வெளியாகி உள்ளது.

தயாரிப்பாளர் ஐசரி கணேஷின் தயாரிப்பு நிறுவனமாக வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷன் நிறுவனம் தயாரிக்கும் புதிய படத்தில் இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்க உள்ளார். கூலி படத்துக்கு பிறகு ஜெயிலர் 2 படத்தை முடித்த பிறகு, இந்த படம்தான் ரஜினிகாந்த் நடிக்க உள்ள அடுத்த படம் என்று தகவல்கள் கூறுகின்றன.

இந்த படத்தில் நடிக்க நடிகர் ரஜினிகாந்த் சம்பளம் ரூ. 250 கோடி என்றும், படத்தின் மேக்கிங் பட்ஜெட் ரூ. 250 கோடி என்றும் மொத்தமாக இந்த படம் ரூ. 500 கோடி பட்ஜெட்டில் உருவாக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இப்போது ரூ. 100 கோடி பட்ஜெட்டில் மூக்குத்தி அம்மன் 2 படத்தை தயாரித்து வரும் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ், இந்த படத்தை ரூ. 500 கோடி பட்ஜெட்டில் தயாரிக்க ஏற்பாடுகளை செய்து வருவது தமிழ் சினிமா துறையினர் மத்தியில் பலத்த ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

சற்று முன்