- Advertisement -
Homeபொழுதுபோக்குசூப்பர் ஸ்டாருக்கு மாஸ் ஹிட் தந்த பாட்ஷா - உங்க டைரக்‌ஷனில் நடிக்க மாட்டேன்...

சூப்பர் ஸ்டாருக்கு மாஸ் ஹிட் தந்த பாட்ஷா – உங்க டைரக்‌ஷனில் நடிக்க மாட்டேன் என்று இயக்குனர் சுரஷே் கிருஷ்ணாவிடம் சொன்ன ரஜினிகாந்த்!

- Advertisement -

தமிழ் சினிமாவில் மிகவும் கவனிக்கப்படும் இயக்குனராக வலம் வந்தவர் இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா. நடிகர் ரஜினிகாந்த் நடித்த வீரா அண்ணாமலை பாபா பாட்ஷா படங்களை இயக்கியவர். கமல் நடித்த இந்திரன் சந்திரன் ஆளவந்தான் படங்களின் இயக்குனரும் இவர்தான். சங்கமம் என்ற ஹிட் படத்தை கொடுத்ததும் சுரேஷ் கிருஷ்ணா தான்.

நடிகர் ரஜினிகாந்த் நடித்த படங்களில் மிகப்பெரிய சூப்பர் ஹிட் படமாக இன்று வரை இருப்பது பாட்ஷா படம்தான். கடந்த 1995ம் ஆண்டில் வெளியான இந்த படம் 30 ஆண்டுகள் ஆன நிலையிலும் ரஜினி படங்களில் ரசிகர்களால் பெரிய அளவில் கொண்டாடப்படும் ஒரு படமாக இருந்து வருகிறது.

- Advertisement -

நடிகர் ரஜினிகாந்துடன் ரகுவரன் நக்மா தேவன் விஜயகுமார் ஜனகராஜ் உள்ளிட்டோர் நடித்த இந்த படத்தில் ஆட்டோ டிரைவர் மாணிக்கம், கடத்தல் மன்னன் மாணிக் பாட்ஷா என்ற 2 கேரக்டரில் ரஜினி நடித்திருந்தார். மார்க் ஆண்டனி என்ற கேரக்டரில் ரகுவரன் தனது வேற லெவல் நடிப்பை தந்திருப்பார்.

தேவா இசையில் பாட்ஷா படத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களும் பெரிய அளவில் அப்போது டிரண்டிங் ஆனது, படத்துக்கு எழுத்தாளர் பாலகுமாரன் எழுதிய வசனங்கள் மேலும் மெருகு சேர்த்தது. ஜெயிலர் படத்தின் வெற்றியை கூட மீண்டும் ஒரு பாட்ஷா படம் போல ரஜினிக்கு அமைந்தது என்றுதான் பலரும் விமர்சித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இந்நிலையில் நேர்காணல் ஒன்றில் பேசிய பாட்ஷா படத்தின் இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா கூறியதாவது, பாட்ஷா படத்துக்கு பிறகு என்ன படம் பண்ணலாம் என்று யோசனையாக அப்போது இருந்தது. பாட்ஷா படத்தின் வெற்றி, எவரெஸ்ட சிகரத்தை தொட்டு விட்டது. அதுக்கு மேல் ஒரு படத்தை நாம திங்க் பண்ணவே முடியாது.

ரஜினி சாரே சொல்லிட்டார். டேக் த பிரேக் அப்படீன்னுட்டார். இனிமேல் உங்க இயக்கத்தில் நான் நடிக்க மாட்டேன். வெளியில் ரெண்டு மூனு படம் பண்ணிட்டு வர்றேன்னு அவரே சொல்லிட்ட்டார். கேஎஸ் ரவிக்குமாருடன் முத்து சுந்தர் சியுடன் அருணாசலம் போன்ற படங்களில் நடிக்க போயிட்டார். நாம் பண்ணக் கூடாது என்று சொல்லிட்டார். பாட்ஷா தந்த அபார வெற்றிக்கு பிறகு இப்போதைக்கு மீண்டும் என்னுடைய இயக்கத்தில் நடிக்க மாட்டேன் என்ற தெளிவாக இருந்து விட்டார், என்று இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்