மலையாளத்தில் பிரேமம் என்ற படம் மூலம் மலர் டீச்சர் என்ற கேரக்டரில் நடித்து சினிமாவில் அறிமுகமானவர் சாய் பல்லவி. முதல் படத்தில் மலையாள நடிகர் நிவின் பாலிக்கு ஜோடியாக நடித்து நல்ல அறிமுகத்தை வரவேற்பை பெற்றார். நீலகிரி மாவட்டம் கோத்தகிரியை சேர்ந்த சாய்பல்லவி, பல் டாக்டர் என்பது குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து தமிழில் நடிகர் தனுஷூடன் மாரி 2 படத்தில் நடித்தார். அடுத்து செல்வராகவன் இயக்கத்தில் நடிகர் சூர்யாவுடன் என்ஜிகே படத்தில் நடித்தார். கதையின் நாயகியை மையப்படுத்தி உருவான கார்கி படத்தில் சாய்பல்லவியின் நடிப்பு வேற லெவலில் இருந்தது. தொடர்ந்து மலையாளம் தெலுங்கு இந்தி படங்களில் சாய்பல்லவி பிஸியாக நடித்து வருகிறார்.
கடந்த ஆண்டில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரித்த அமரன் படத்தில் சிவகார்த்திகேயன், சாய்பல்லவி நடித்திருந்தனர். மறைந்த ராணுவ மேஜர் முகுந்த் வரதராஜன் வாழ்க்கை வரலாறு படமாக உருவான அமரன் படத்தில், இந்து ரெபேகா வர்கீஸ் கேரக்டரில் நடித்த சாய்பல்லவியின் நடிப்பு மிகப்பெரிய வரவேற்பை பாராட்டை ரசிகர்களிடம் பெற்றது. இந்த படம் ரூ. 325 கோடி வசூலித்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் நடிகை சாய்பல்லவி, தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவுடன் நடித்த தண்டேல் படம் கடந்த மாதம் தியேட்டர்களில் வெளியாகி ரசிகர்களின் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றது. இதில் நாயகியான சாய்பல்லவியின் நடிப்பும், நடன காட்சிகளும் ரசிகர்களால் பெரிய அளவில் கொண்டாடப்பட்டது.
கடந்த சில தினங்களுக்கு முன் தண்டேல் படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியானது. தியேட்டர்களில் ரிலீஸ் ஆன போது ரசிகர்களால் கொண்டாடப்பட்ட இந்த படத்தை ஓடிடி தளத்தில் பார்த்த ரசிகர்கள், மிக மிக மோசமான படம் என்று கடுமையாக விமர்சித்து வருகின்றனர். குறிப்பாக சாய்பல்லவியின் நடிப்பை கலாய்த்தும் கமெண்ட் செய்கின்றனர்.
தியேட்டர்களில் வெளியான போது, தனது நடிப்பை கொண்டாடிய ரசிகர்கள் இப்போது ஓடிடி தளத்தில் வெளியான நிலையில் அதே வரவேற்பை தராமல் இப்படி மோசமாக விமர்சிக்கிறார்களே என்று நடிகை சாய்பல்லவி பயங்கர அப்செட்டில் இருந்து வருகிறார். ஓடிடி தளத்திலும் தண்டேல் படத்துக்கு பெரிய வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்த்த தண்டேல் படக்குழுவினரும் டென்சனில் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.





