- Advertisement -
Homeபொழுதுபோக்குவாக்குறுதிகளை காற்றில் பறக்கவிட்டு, காகிதத்தில் பட்டம் விடும் பாசாங்கு வேலை இது - திமுக அரசின்...

வாக்குறுதிகளை காற்றில் பறக்கவிட்டு, காகிதத்தில் பட்டம் விடும் பாசாங்கு வேலை இது – திமுக அரசின் பட்ஜெட் குறித்து நடிகர் விஜய் ஆவேசம்!

- Advertisement -

தமிழக சட்டசபையில் நேற்று தமிழக அரசின் 2025 – 26ம் ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. தொடர்ந்து திமுக அரசை கடுமையாக விமர்சித்து வரும் தவெக கட்சியின் தலைவர் நடிகர் விஜய், இந்த பட்ஜெட் குறித்து கடுமையாக விமர்சித்துள்ளார். பாசாங்கு காட்டி தமிழக மக்களை திமுக அரசு ஏமாற்றுகிறது என்று குற்றம் சாட்டியிருக்கிறார்.

தமிழக அரசின் நிதி நிலை அறிக்கை குறித்து தமிழக வெற்றிக் கழகம் நடிகர் விஜய் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது, விலைவாசி ஏற்றத்தை கட்டுப்படுத்த எந்த நடவடிக்கையும் இல்லை. தேர்தல் வாக்குறுதியான கேஸ் மானியம் 100 வழங்கப்படும் என்பது என்ன ஆனது என்று தெரியவில்லை. அதேபோல் பெட்ரோல் டீசல் விலை குறைப்பு வாக்குறுதிகள் சொன்னது போல் முழுமையாக நிறைவேற்றப்படவில்லை.

மேலும் ரேஷனில் சர்க்கரை கூடுதலாக வழங்கப்படும் என்பது உள்ளிட்ட பல்வேறு தேர்தல் வாக்குறுதிகளும் என்ன ஆயின என்று தெரியவில்லை. பொதுமக்களை வெகுவாக பாதிக்கும் 2 மாதங்களுக்கு ஒரு முறை வசூலிக்கப்படும் மின்சார கட்டணம் மாதந்தோறும் செலுத்தக்கூடியதாக மாற்றப்படும் என்ற தேர்தல் வாக்குறுதி என்ன ஆனதோ? என்பது வெற்று விளம்பர அரசுக்குதான் வெளிச்சம்.

அரசு ஊழியர்களுக்கு கூடுதல் குடியிருப்புகள் கட்டுவது இருக்கட்டும், அரசு ஊழியர்களின் லட்சக்கணக்கான குடும்பங்கள் நலம் சார்ந்த ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பின் முக்கிய கோரிக்கையான அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் பழைய ஓய்வூதிய திட்டம் மீண்டும் அமல்படுத்துவது, பணியில் நிரந்தரம் குறித்த அறிவிப்பு எதுவும் இல்லை.

இந்த நிதிநிலை அறிக்கையில் பெரும்பான்மையான ஏதேதோ அறிவிப்புகள் என்று போலித்தனமே அதிகம் உள்ளது. அதனால் சாதாரண நிலையில் இருக்கும் பொதுமக்கள் நேரடியாக பலனடையும் அறிவிப்புகள் ஏதும் அற்றதாகவே இருக்கிறது. விளம்பர மாடல் அரசின் மறைமுக முதலாளியாக இருக்கும் ஒன்றிய பாஜக அரசு பட்ஜெட்டில், டெல்லியில் இருந்து கொண்டு தமிழ்நாட்டையே மறந்து ஒதுக்கியது. இந்த விளம்பர மாடல் அரசோ தமிழ்நாட்டில் இருந்து கொண்டு தமிழ்நாட்டு மக்கள் நலன்களை மறந்து விட்டு ஒரு பட்ஜெட் வெளியிட்டுள்ளது.

இதுதான் இவர்கள் இருவரும் ஒரே மனநிலை கொண்ட உறவுக்காரர்கள் என்பதற்கான உறுதிப்பாடு ஆகும். மக்களை பற்றி கவலைப்படாமல் தேர்தல் வாக்குறுதிகளை காட்டில் பறக்க விட்டு காகிதத்தால் பட்டம் விடும் பாசாங்கு வேலைதான் இந்த பட்ஜெட் அறிவிப்பு. இந்த ஏமாற்று வேலைகளுக்கெல்லாம் மக்கள் கொடுக்கும் மிகப்பெரிய பதிலடியாக 2026 சட்டமன்ற தேர்தல் முடிவுகள் இருக்கும். இதை இந்த வெற்று விளம்பர மாடல் திமுக அரசு விரைவில் உணரும் என்று நடிகர் விஜய் அதில் தெரிவித்துள்ளார்

சற்று முன்