- Advertisement -
Homeபொழுதுபோக்குரஜினி பட சாதனையை ரஜினி படமே முறியடித்து விட்டதா? கூலி படம் தந்த ஆச்சரியம் -...

ரஜினி பட சாதனையை ரஜினி படமே முறியடித்து விட்டதா? கூலி படம் தந்த ஆச்சரியம் – ரிலீஸ் தேதி குறித்து வெளியான முக்கிய தகவல்!

- Advertisement -

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்தாண்டில் வெளியான படம் வேட்டையன். இந்த படம் ரூ. 265 கோடி வரை வசூலித்த நிலையில் எதிர்பார்த்த அளவுக்கு பெரிய வரவேற்பை வெற்றியை பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் அமிதாப் பச்சன் ராணா டகுபதி பகத் பாசில் போன்ற நட்சத்திர கலைஞர்கள் இருந்தும் படம் எதிர்பார்த்த அளவுக்கு போகவில்லை.

இந்த படத்தில் நடிகர் ரஜினிகாந்த் என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் அதிகாரியாக நடித்திருந்தார். அவருக்கு ஜோடியாக மஞ்சுவாரியார் நடித்திருந்தார். அனிருத் இசையமைத்து இருந்தார். லைகா புரடக்சன்ஸ் தயாரித்த இந்த படம் சாதாரண ஒரு படமாகவே ரஜினிக்கு அமைந்தது.ஜெய்பீம் அளவுக்கு இந்த படம் இயக்குனர் தசெ ஞானவேல் ராஜாவுக்கு பெயர் பெற்றுத் தரவில்லை.

வேட்டையன் படத்துக்கு பிறகு ரஜினிகாந்த் இப்போது தனது 171வது படம் கூலி படத்தில் நடித்து வருகிறார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் டைரக்ட் செய்கிறார். அனிருத் இசையமைக்கிறார். இந்த படத்தில் சத்யராஜ் ஸ்ருதிஹாசன் அபிராமி கன்னட நடிகர் உபேந்திரா மலையாள நடிகர் சவுபின் சாகர் தெலுங்கு நடிகர் நாகர்ஜூனா இந்தி நடிகர் அமீர்கான் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

கூலி படத்தின் படப்பிடிப்பு 80 சதவீதம் முடிவடைந்த நிலையில், அடுத்த மாதம் இறுதிக்குள் ஷூட்டிங் முழுமையாக நிறைவடைய உள்ளது. மேலும் நடிகை பூஜா ஹெக்டே இந்த படத்தில் ஒரு ஐட்டம் பாடலுக்கு ஆடியிருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த படம் ரஜினி லோகேஷ் கனகராஜ் காம்போவில் உருவான பிரமாண்ட படம் என்பதால், ரூ. 1000 கோடி வசூலை தொடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் கூலி படம் டிஜிட்டல் ரைட்ஸ் விற்பனை நடந்துள்ளது. அமேசான் பிரைம் ஓடிடி நிறுவனம் கூலி படத்தை ரூ. 120 கோடி விலைக்கு வாங்கியுள்ளது. வழக்கமாக ரஜினி படங்கள் ரூ. 100 கோடிக்குள்தான் டிஜிட்டல் ரைட்ஸ் வியாபாரம் நடந்து வருகிறது. ஷங்கர் இயக்கிய 2.0 படம்தான் அதிகபட்சமாக ரூ. 110 கோடிக்கு டிஜிட்டல் ரைட்ஸ் விலை போயிருந்தது. இப்போது 2.0 டிஜிட்டல் ரைட்ஸ் விலைை முந்திய நிலையில் ரூ. 120 கோடிக்கு கூலி படம் விற்பனை ஆகியுள்ளது.

அதனால் ரஜினியின் 2.0 டிஜிட்டல் ரைட்ஸ் அதிக விலை என்ற சாதனையை ரஜினி நடித்த கூலி படம் முறியடித்து விட்டது. மேலும் கூலி படம் ரிலீஸ் தேதி குறித்த தகவலும் வெளியாகி உள்ளது. அதன்படி வருகிற ஆகஸ்ட் 14ம் தேதி கூலி படம் ரிலீஸாகிறது. சுதந்திர தினம் கிருஷ்ண ஜெயந்தி விநாயகர் சதுர்த்தி அடுத்தடுத்து விசேஷ நாட்கள் வருவதால், கூலி படம் ஆகஸ்ட் 14 ரிலீஸ் என்பதில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் உறுதியாக உள்ளது.

சற்று முன்