தமிழ் சினிமாவில் மிகவும் கவனம் பெற்ற இளம் இயக்குனராக இருப்பவர் லோகேஷ் கனகராஜ். அவர் இயக்கிய முதல் படம் மாநகரம் சூப்பர் ஹிட் படமாக வெற்றி பெற்ற நிலையில் தொடர்ந்து அவர் இயக்கிய கைதி மாஸ்டர் விக்ரம் லியோ படங்கள் பெரிய வெற்றிப் படங்களாக இருந்தன. இப்போது ரஜினி நடிப்பில் கூலி படத்தை இயக்கி வருகிறார்.
மாநகரம் படத்தை சஸ்பென்ஸ் திரில் படமாக எடுத்த லோகேஷ் கனகராஜ், அடுத்து கார்த்தி நடித்த கைதி படத்தை இயக்கினார். ஒரு நாள் இரவில் நடக்கும் சம்பவங்களை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இந்த படம் பெரிய அளவில் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் நாயகி இல்லை, பாடல்கள் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
கைதி படம் மொத்தம் 57 இரவுகளில் படமாக்கப்பட்டது. பகலில் அரை நாள் மட்டுமே படப்பிடிப்பு நடத்தப்பட்டது. போதை மருந்தால் பாதிக்கப்பட்ட போலீஸ் அதிகாரிகளை, முன்னாள் சிறைக் கைதி கார்த்தி, லாரியில் கொண்டு சென்று காப்பாற்றுவதே படத்தின் கதை. இதில் போலீஸ் ஸ்டேஷனுக்குள் ரவுடிகள் கூட்டம் புகுந்து செய்யும் வன்முறை காட்சிகளும் வேற லெவலில் இருக்கும்.
கைதி படம் மாபெரும் வெற்றியை வரவேற்பை பெற்ற நிலையில் அடுத்து கைதி 2 படத்தை தான் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்குவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் மாஸ்டர் விக்ரம் லியோ அடுத்து கூலி என அவர் அடுத்தடுத்த படங்களில் கமிட் ஆகி அதில் பிஸியாகி விட்டதால் கைதி 2 படம் தொடர்ந்து தள்ளிப் போய்க்கொண்டே இருந்தது.
இந்த சூழலில் கூலி படப்பிடிப்பை முடித்து விட்டு லோகேஷ் கனகராஜ் கைதி 2 படத்தை இயக்கவில்லை. அடுத்த ஆண்டில் கைதி 2 படப்பிடிப்பு துவங்க உள்ளது. இதற்கிடையே நடிகர் கார்த்திக்கு கமிட் ஆன படங்கள் முடிவடைய வேண்டும். லோகேஷ் கனகராஜ் ஒரு தெலுங்கு படம் இயக்க போவதாகவும் கடந்த வாரத்தில் தகவல் வெளியாகி ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை தந்தது.
ஆனால் இன்று வந்த லேட்டஸ்ட் தகவலின் படி கூலி படப்பிடிப்பை முடித்து விட்டு இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அடுத்த புராஜெக்ட் ஆக கார்த்தி நடிக்கும் கைதி 2 படத்தை தான் கையில் எடுக்க உள்ளார். இந்த ஆண்டின் இறுதியில் கைதி 2 படப்பிடிப்பு துவங்க உள்ளது. வருகிற ஜூலை மாதம் கைதி 2 படத்தின் ப்ரீ புரடக்சன்ஸ் பணிகளை துவங்கும் லோகேஷ் கனகராஜ் வருகிற செப்டம்பர் மாதம் படப்பிடிப்பை துவங்க உள்ளார். அதன்பிறகு ஷூட்டிங் விறுவிறுப்பாக நடக்கும் என்ற தகவல் வெளியாகி உள்ளது.





