நடிகர் விஜய் தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக இருப்பவர். இப்போது அவர் எச் வினோத் இயக்கத்தில் ஜனநாயகன் என்ற படத்தில் நடித்து வருகிறார். இதுதான் தனது கடைசி படம் என்றும் இனிமேல் நடிக்கப் போவதில்லை என்றும் ஏற்கனவே நடிகர் விஜய் அறிவித்து விட்டார். இந்த படத்தின் படப்பிடிப்பும் இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கிறது.
தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் இயக்கத்தை துவங்கிய நடிகர் விஜய், கடந்த பிப்ரவரி மாதத்தில் தனது கட்சியின் 2வது ஆண்டு துவக்க விழாவை பிரமாண்டமாக நடத்தினார். இந்த விழாவில் சிறப்பு அழைப்பாளராக தேர்தல் வியூக ஆலோசகர் பிரசாந்த் கிஷோரும் கலந்துக்கொண்டார். இந்த விழாவில் பேசிய விஜய் 2026ம் ஆண்டில் தவெக ஆட்சியமைக்கும் என்று உறுதியாக கூறியிருக்கிறார்.
சீனியர் நடிகர்கள் ரஜினி கமல்ஹாசனை போலவே நடிகர்கள் விஜயும் அஜீத்குமாரும் உச்ச நடிகர்களாக தமிழ் சினிமாவில் ரசிகர்களால் கொண்டாடப்படுகின்றனர். விஜய் படத்தை இயக்கவும் அவரது படத்தை தயாரிக்கவும் அவருடன் படத்தில் நடிக்கவும் தமிழ் சினிமாவில் கடும் போட்டியே நிலவி வருகிறது.
ஏனென்றால் விஜய் நடித்த படம் என்றால் சுமாரான கதை என்றாலும் கூட கமர்ஷியல் ரீதியாக பெரிய வெற்றியை பெற்று விடுகிறது. விஜய் படத்தில் நடிக்கும் போது ரசிகர்கள் மத்தியில் பெரிய அடையாளம் கிடைத்து விடுகிறது. விஜய் பட இயக்குனர் விஜய் பட தயாரிப்பாளர் என்ற அடையாளம் அடுத்த பெரிய நடிகரை இயக்க அவரது படத்தை தயாரிக்க வாய்ப்பாகிறது.
ஆனால் இந்த மாதிரியான ஒரு சூழலில், நடிகர் விஜய் நடிக்கும் படங்களுக்கு தொடர்ந்து இசையமைக்கும் வாய்ப்பு பலமுறை வந்தும் ஒரு பிரபல இசையமைப்பாளர் இசையமைக்க மறுப்பு தெரிவித்து இருக்கிறார். இப்படி விஜய் நடித்த 10 படங்களுக்கு மேல் அவர் இசையமைக்க முடியாது என அவர் விஜய் படங்களை புறக்கணித்து இருக்கிறார் என்ற தகவல் விஜய் ரசிகர்களை ஆச்சரியப்பட வைத்திருக்கிறது.
அந்த இசையமைப்பாளர் பல வெற்றிப் படங்களுக்கு இசையமைத்த ஹாரிஸ் ஜெயராஜ்தான். இதுகுறித்து நேர்காணல் ஒன்றில் பேசிய இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ், நான் விஜய் நடித்த 10 படங்களுக்கு இசையமைக்க கேட்ட போது நோ சொல்லிவிட்டேன். 11வது படம்தான் நண்பன். ஏனென்றால் ஒரு நேரத்துல 10 படம் என்னால் பண்ண முடியாது. அது நல்லாவும் இருக்காது. ஒரு குழந்தை வச்சிருந்தால் சந்தோசமாக இருப்பாங்க. 10 குழந்தை இருந்தால் எப்படி இருக்கும், அப்படித்தான் இதுவும் என்று அவர் வெளிப்படையாக கூறியிருக்கிறார்.





