- Advertisement -
Homeபொழுதுபோக்குரஜினி நடித்த கூலி படம் ரிலீஸ் நாளில் இந்த படமும் ரிலீஸ் ஆகப் போகுதா? இதென்னடா...

ரஜினி நடித்த கூலி படம் ரிலீஸ் நாளில் இந்த படமும் ரிலீஸ் ஆகப் போகுதா? இதென்னடா சோதனை என புலம்பும் ரஜினி ரசிகர்கள்!

- Advertisement -

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வேட்டையன் படத்துக்கு பிறகு இப்போது கூலி படம் தயாராகி விட்டது. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் போஸ்ட் புரடக்சன்ஸ் பணிகள் விரைவில் துவங்குகின்றன. வருகிற ஆகஸ்ட் 14ம் தேதி கூலி படம் ரிலீஸ் ஆக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தி தெலுங்கு படங்கள் தொடர்ந்து 1000 கோடி ரூபாய் வசூலை எட்டி வருகின்றன. கடந்தாண்டில் வெளியான புஷ்பா 2 படம் 1800 கோடி ரூபாய் வசூல் சாதனை புரிந்தது. ஆனால் தமிழ் சினிமாவில் இன்னும் 1000 கோடி ரூபாய் வசூல் இல்லாத நிலையில், தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அது பலத்த ஏமாற்றத்தை தந்து வருகிறது.

இந்த சூழலில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள பான் இந்தியா படம் கூலி, நிச்சயமாக ரூ. 1000 கோடி வசூல் சாதனையை படைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை மிக பிரமாண்டமாக தயாரித்துள்ள நிலையில் வருகிற ஆகஸ்ட் 14ம் தேதி கூலி படம் உலகம் முழுவதும் ரிலீஸாகிறது.

இந்நிலையில் கூலி படம் ரிலீஸாகிற அதே நாளில் ஆகஸ்ட் 14ம் தேதியன்று இந்தி நடிகர் ஹிருத்திக் ரோஹன் மற்றும் தெலுங்கு நடிகர் ஜூனியர் என்டிஆர் இணைந்து நடித்த பான் இந்தியா படம் வார் 2 வெளியாகிறது. கடந்த 2019ம் ஆண்டில் வெளியான ஹிருத்திக் ரோஷன் நடித்த வார் படம் பெரிய வெற்றியடைந்த நிலையில், அதன் தொடர்ச்சியாக வார் 2 படம் வெளியாக உள்ளது.

வார் 2 படத்தில் தெலுங்கு முன்னணி நடிகர் ஜூனியர் என்டிஆர் நடித்திருப்பதால் ஆந்திரா தெலங்கானா மாநிலங்களில் வார் 2 படத்துக்கு அதிக எண்ணிக்கையில் தியேட்டர்கள் ஒதுக்கப்படும் பட்சத்தில் கூலி படத்துக்கு ஆந்திரா தெலங்கானாவில் போதிய எண்ணிக்கையில் தியேட்டர்கள் கிடைப்பதில் சிக்கல் ஏற்படும் வாய்ப்பு அதிகமாக உள்ளது.

அதே போல் இந்தியில் ஹிருத்திக் ரோஷன் முக்கிய முன்னணி நடிகர் என்பதால் அங்கும் அவருக்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பும் ஆதரவும் கிடைத்து வருகிறது. அதனால் வார் 2 படம் ரிலீஸாகும் ஆகஸ்ட் 14ம் தேதி கூலி படம் ரிலீஸாகுமா, அல்லது ரிலீஸ் தேதியில் ஏதாவது மாற்றம் இருக்குமா என்ற குழப்பமான சந்தேகம் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

சற்று முன்