- Advertisement -
Homeபொழுதுபோக்குஎன் வாழ்க்கையில் கேப்டன் விஜயகாந்தை தான் நான் பாலோ அப் செய்கிறேன், அந்த சம்பவம் என்னால்...

என் வாழ்க்கையில் கேப்டன் விஜயகாந்தை தான் நான் பாலோ அப் செய்கிறேன், அந்த சம்பவம் என்னால் மறக்க முடியாது – பிரபல பாலிவுட் நடிகர் சொன்ன தகவல்!

- Advertisement -

கடந்த 50 ஆண்டு கால தமிழ் சினிமா வரலாற்றில் கேப்டன் விஜயகாந்த் பெயரை தவிர்க்க முடியாது. ஏனெனில் நடிகராக மட்டுமின்றி தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவராக பண்புள்ள ஒரு மனிதராக பல அரிய பணிகளை சிறப்பாக செய்தவர் கேப்டன் விஜயகாந்த். மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்தவர்.

பல ஆண்டுகளாக கடனில் சிக்கித் தத்தளித்த தென்னிந்திய நடிகர் சங்கத்தை மீட்டெடுத்தவர் நடிகர் விஜயகாந்த் தான். அவர் நடிகர் சங்கத் தலைவராக இருந்த காலகட்டத்தில் சிங்கப்பூர் மலேசியா துபாய் போன்ற வெளிநாடுகளில் நட்சத்திர இரவு கலை நிகழ்ச்சிகளை வெற்றிக்கரமாக நடத்தி அதில் ரஜினிகாந்த் கமல்ஹாசன் போன்றவர்களை பங்கேற்க செய்தவர்.

- Advertisement -

திறமை இருந்தும் சினிமாவில் வாய்ப்பின்றி தவித்த பல கலைஞர்களை அடையாளம் கண்டு தமிழ் சினிமாவுக்குள் கொண்டு வந்த பெருமைக்கு உரியவர் கேப்டன் விஜயகாந்த். நடிகர்கள் சரத்குமார் வடிவேலு பொன்னம்பலம் மன்சூர் அலிகான் ஆனந்தராஜ் லிவிங்ஸ்டன் என பலரை நடிகராக்கியவர் நடிகர் விஜயகாந்த் தான்.

பாலிவுட்டில் இன்று பிரபல வில்லன் நடிகராக வலம் வருபவர் சோனு சூட். தமிழில் பல படங்களில் நடித்திருக்கிறார். குறிப்பாக சந்திரமுகி ஒஸ்தி தேவி அருந்ததி கள்ளழகர் உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார். சமீபத்தில் சுந்தர் சி இயக்கத்தில் விஷால் நடித்த மதகஜ ராஜா படத்திலும் வில்லன் கேரக்டரில் அரசியல்வாதியாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

கடந்த 1999ம் ஆண்டில் விஜயகாந்த் லைலா நடித்த படம் கள்ளழகர். இந்த படத்துக்கு தேவா இசையமைத்து இருந்தார். இயக்குனர் பாரதி இயக்கிய இந்த படத்தில் இந்தி நடிகர் சோனு சூட் நடித்திருந்தார். அந்த படத்தில் நடித்த அனுபவம் குறித்து சமீபத்தில் பேசிய நடிகர் சோனு சூட் கேப்டன் விஜயகாந்த் குறித்து பெருமையாக பேசியிருக்கிறார்.

இதுகுறித்து நடிகர் சோனு சூட் கூறியதாவது, கள்ளழகர் படத்துக்கு நான் சரியாக இருப்பேன் என்று விஜயகாந்த் தான் முடிவு செய்தார். எனக்கு சினிமா சண்டை போடத் தெரியாது என்பதை தெரிந்துக்கொண்டு, அதை நான் கற்றுக்கொள்வதற்காக ஒரு மாதம் எனக்காக படப்பிடிப்பை தள்ளி வைத்தார். அவரது கவனிப்பில் முதல் படத்திலேயே ராஜ மரியாதை பெற்றவன் நானாக மட்டும்தான் இருப்பேன். அவரிடம் மொழி கடந்த ஒரு அன்பினை பார்த்தேன். உபசரிப்பில் நான் அவரை தான் பின்பற்றுகிறேன். எனக்கு மிகப்பெரிய இன்ஸ்பிரேஷனே அவர்தான். விஜயகாந்த் கடவுளின் குழந்தை என்று நடிகர் சோனு சூட் கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்