- Advertisement -
Homeபொழுதுபோக்குபா ரஞ்சித் இயக்கத்தில் உருவாகும் சார்பட்டா பரம்பரை 2 - திடீரென விலகிய முக்கிய தயாரிப்பு...

பா ரஞ்சித் இயக்கத்தில் உருவாகும் சார்பட்டா பரம்பரை 2 – திடீரென விலகிய முக்கிய தயாரிப்பு நிறுவனம் – இப்போதைக்கு படப்பிடிப்பு நடக்க வாய்ப்பில்லே!

- Advertisement -

தமிழ் சினிமாவில் மிக முக்கியமான இயக்குனராக கவனம் பெற்றவர் இயக்குனர் பா ரஞ்சித். அட்டக்கத்தி படம் மூலம் இயக்குனராக அறிமுகுமானார். நல்ல படைப்பாளியாக ரசிகர்கள் ரசிக்கும் படங்களை தந்து வருகிறார். அதே நேரத்தில் சாதியம் உரிமை பேசும் அவரது படங்கள் கடுமையான விமர்சனங்களிலும் அடிக்கடி சிக்கி வருவதும் குறிப்பிடத்தக்கது.

அட்டக்கத்தி படத்தை தொடர்ந்து மெட்ராஸ் படமும் அவருக்கு நல்ல வரவேற்பை அடையாளத்தை பெற்றுத் தந்தது. அதன்பிறகு நடிகர் ரஜினிகாந்த் நடித்த கபாலி காலா ஆகிய படங்களை அடுத்தடுத்து இயக்கினார். தொடர்ந்து கடந்த ஆண்டில் பா ரஞ்சித் இயக்கத்தில் தங்கலான் படம் வெளியானது.

சியான் விக்ரம் மாளவிகா மோகன் பார்வதி பசுபதி உள்ளிட்டோர் நடித்த தங்கலான் படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியானது. ஆனால் இந்த படம் எதிர்பார்த்த வரவேற்பை ரசிகர்களிடம் பெறாமல் படுதோல்வியை சந்தித்தது. குறிப்பாக சியான் நடிப்பு மிக அழுத்தமாக இருந்தாலும் படத்தின் திரைக்கதை ரசிகர்களை கவராமல் ஏமாற்றம் தந்துவிட்டது.

இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் சில ஆண்டுகளுக்கு முன் ஓடிடி தளத்தில் வெளியான படம் சார்பட்டா பரம்பரை. ஆர்யா பசுபதி துஷாரா விஜயன் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான இந்த படம் மாபெரும் வரவேற்பை ரசிகர்கள் மத்தியில் பெற்றது. குத்துசண்டை போட்டியை கதைக்களமாக கொண்டு இந்த படத்தை பா ரஞ்சித் இயக்கி இருந்தார்.

இதையடுத்து தற்போது சார்பட்டா பரம்பரை படத்தின் 2ம் பாகத்தை இயக்குனர் பா ரஞ்சித் டைரக்ட் செய்கிறார். இந்த படத்தை பிரமாண்ட படமாக உருவாக்க அவர் திட்டமிட்ட நிலையில் ரூ. 80 கோடி பட்ஜெட்டில் இந்த படம் உருவாக உள்ளது. நடிகர் ஆர்யாவின் தி சோ பார் பீப்பிள் தயாரிப்பு நிறுவனம் நயன்தாரா நடித்த அன்னபூரணி படத்தை தயாரித்த நார்த் ஸ்டுடியோ என்ற தயாரிப்பு நிறுவனம் மற்றும் ஜீ டிவி நிறுவனம் இணைந்து இந்த படத்தை தயாரிக்க திட்டமிடப்பட்டது.

ஆனால் இப்போது ஜீ டிவி தயாரிப்பு நிறுவனம் சார்பட்டா பரம்பரை 2 படத்தில் இருந்து விலகி விட்டது. ஏனெனில் இந்த படத்தின் பட்ஜெட் ரூ. 80 கோடி என்பதால் பெரிய அளவில் இந்த படத்தில் முதலீடு செய்ய அந்த நிறுவனம் முன்வராமல் ஒதுங்கி கொண்டது. அதனால் சார்பட்டா பரம்பரை 2 படப்பிடிப்பு பணிகள் அப்படியே கிடப்பில் போடப்பட்டு விட்டன. இன்னொரு தயாரிப்பு நிறுவனம் முன்வந்தால் மட்டுமே இந்த படத்தின் ஷூட்டிங் துவங்கும் என்ற தகவல் இப்போது வெளியாகி உள்ளது.

சற்று முன்