நடிகர் சூர்யா நடிப்பில் கடந்தாண்டில் வெளியான படம் கங்குவா. படம் நெருப்பு மாதிரி இருக்கும், ரூ. 2000 கோடி வசூலித்து சாதனை படைக்கும் என்று ஓவர் பில்டப் செய்யப்பட்ட இந்த படம் மிக மோசமான தோல்வியை தழுவியது. கழுவி கழுவி ஊற்றப்பட்ட இந்தியன் 2 படத்தையே ஓரம்கட்டிய படம் கங்குவா என்றும் சினிமா ரசிகர்கள் கலாய்க்கும் அளவுக்கு நிலமை மோசமானது.
தொடர்ந்து 10 ஆண்டுகளாக தோல்வி படங்களையே தந்து வரும் நடிகர் சூர்யாவுக்கு இந்த ஆண்டு நம்பிக்கையான ஆண்டான இருக்க அதிக வாய்ப்புள்ளது. கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா பூஜா ஹெக்டே நடித்த ரெட்ரோ படம் வருகிற மே 1ம் தேதி ரிலீஸாக உள்ளது. இந்த படம் பெரிய வரவேற்பை பெறும் என்று கூறப்படுகிறது.
அதே போல் இயக்குனர் மற்றும் நடிகர் ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா தனது 45வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் திரிஷா ஷிவதா சுவாசிகா மன்சூர் அலிகான் நட்டி ஆர்ஜே பாலாஜி யோகிபாபு உள்ளிட்ட நட்சத்திர நடிகர்கள் நடித்திருப்பதால் இந்த படமும் பெரிய வெற்றியை பெறும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த படங்களுக்கு பிறகு நடிகர் சூர்யா வெற்றிமாறன் இயக்கத்தில் கலைப்புலி தாணு தயாரிப்பில் வாடிவாசல் படத்தில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அந்த படத்தின் படப்பிடிப்பு வருகிற ஜூன் ஜூலை மாதம் வரை தள்ளிப் போகிறது. அதனால் அதற்கு முன்பாக தெலுங்கு பட இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் நடிகர் சூர்யா தனது அடுத்த படத்தில் நடிக்கிறார்.
தமிழில் தனுஷ் நடித்த வாத்தி, தெலுங்கில் துல்கர் சல்மான் மீனாட்சி சௌத்ரி நடித்த லக்கி பாஸ்கர் படங்களை இயக்கிய இயக்குனர் வெங்கி அட்லூரி படத்தில்தான் சூர்யா அடுத்து நடிக்க உள்ளார். இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்க நடிகை மமிதா பைஜூ மற்றும் அனுபமா பரமேஸ்வரன் ஆகிய 2 பேரிடமும் பேச்சு வார்த்தை நடந்து வருகிறது.
ஒருவேளை மமிதா பைஜூ இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடிக்க மறுத்தால் அனுபமா பரமேஸ்வரன் நடிக்க வாய்ப்புள்ளது. பிரேமலு படத்தை தொடர்ந்து தமிழில் ஜனநாயகன் படத்தில் நடித்து வரும் மமிதா பைஜூ விஷ்ணு விஷால் சிம்பு படங்கள் உள்பட ஏற்கனவே 5 படங்களில் நடிக்க கமிட் ஆகி விட்டதாக கூறப்படுகிறது. எனினும் சூர்யா முன்னணி ஹீரோ என்பதால் இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக மமிதா பைஜூ நடிக்க அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.





