- Advertisement -
Homeபொழுதுபோக்குவரும் 2026ம் ஆண்டு ஜனவரி 9ம் தேதி ஜனநாயகன் படம் ரிலீஸ், தளபதி ரசிகர்களுக்கு...

வரும் 2026ம் ஆண்டு ஜனவரி 9ம் தேதி ஜனநாயகன் படம் ரிலீஸ், தளபதி ரசிகர்களுக்கு ஏற்பட்ட திடீர் ஏமாற்றம் – அட இதுல இப்படி ஒரு விஷயம் இருக்குதா?

- Advertisement -

நடிகர் விஜய் இப்போது ஜனநாயகன் என்ற படத்தில் நடித்து வருகிறார். பெங்களூருவைச் சேர்ந்த கேவிஎன் புரடக்சன்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனம் இந்த படத்தை தயாரித்து வருகிறது. இயக்குனர் எச் வினோத் இயக்கத்தில் அனிருத் இசையில் உருவாகும் இந்த படத்தில் நாயகியாக பூஜா ஹெக்டேவும், முக்கிய கேரக்டரில் மமிதா பைஜூவும் நடித்து வருகின்றனர்.

ஜனநாயகன் படப்பிடிப்பு பிப்ரவரி மாத இறுதிக்குள் முடிவடையும் என்று ஆரம்பத்தில் சொல்லப்பட்டது. பிறகு ஏப்ரல் வரை நீடிக்கும் என்றும் தகவல் வந்தது. அதன்பிறகு 2 சண்டை காட்சிகள் 3 பாடல் காட்சிகள் இன்னும் படம்பிடிக்க வேண்டி உள்ளதால் ஜூன் மாதம் வரை ஷூட்டிங் நீடிக்க வாய்ப்புள்ளதாக சில வாரங்களுக்கு முன் தகவல் வெளியானது.

இதற்கிடையே சில தினங்களுக்கு முன், கேவிஎன் புரடக்சன்ஸ் தயாரிப்பு நிறுவனத்தில் வருமான வரித்துறை சோதனை நடத்தியதால் 22 நாட்களாக ஜனநாயகன் படப்பிடிப்பில் தொழிலாளர்க்கு பேட்டா வழங்கப்படவில்லை. கேவிஎன் புரடக்சன்ஸ் நிறுவனத்தின் வங்கி கணக்குகளை வருமான வரித்துறை முடக்கியதால் நிதி நெருக்கடி காரணமாக படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்ட தகவலும் வெளியானது.

இந்த சூழலில் இப்போது விஜய் நடிப்பில் உருவாகி வரும் ஜனநாயகன் படம் வருகிற 2026ம் ஆண்டில் ஜனவரி மாதம் 9ம் தேதி தைப்பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரிலீஸ் செய்யப்படும் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதே பண்டிகை நேரத்தில் சிவகார்த்திகேயன் நடித்த பராசக்தி படமும் ரிலீஸ் ஆகும் என்ற தகவலும் ஏற்கனவே இருந்து வருகிறது.

நடிகர் விஜய் நடிப்பில் கடைசியாக வெளியான படம் தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல்டைம். இந்த படம் கடந்த 2024ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 5ம் தேதி வெளியானது. அதன்பிறகு 16 மாதங்கள் கழித்துதான் ஜனநாயகன் படம் திரைக்கு வரும் என்ற தகவல் தளபதி ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றத்தை தந்துள்ளது. நடப்பாண்டில் சுதந்திர தினம் தீபாவளிக்கு தளபதி படம் இல்லையா, என விரக்தியில் உள்ளனர்.

அத்துடன் வருகிற 2026ம் ஆண்டில் ஜனவரி 9ம் தேதி விஜய் நடித்த ஜனநாயகன் படத்தை ரிலீஸ் செய்ய மற்றொரு முக்கிய காரணம், பொங்கல் பண்டிகை என்றாலே தொடர் விடுமுறை காலமாக இருக்கும். 10 நாட்களுக்கு மேல் இந்த பண்டிகை கொண்டாட்டம் மக்கள் மத்தியில் நீடிக்கும். அதனால் விஜயின் கடைசி படம் என்பதால் வசூலை எளிதில் ரூ. 500 கோடி வரை சில தினங்களிலேயே அள்ளிவிடலாம் என்ற நோக்கத்தில் படக்குழு, பொங்கல் ரிலீஸ் என அறிவித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

சற்று முன்