- Advertisement -
Homeபொழுதுபோக்குபோர் தொழில் இயக்குனருடன் தனுஷ் கைகோர்க்கும் திரைப்படத்தில் அந்த குணச்சித்திர நடிகர்தான் வில்லனாம்... லியோ நடிகருக்கும்...

போர் தொழில் இயக்குனருடன் தனுஷ் கைகோர்க்கும் திரைப்படத்தில் அந்த குணச்சித்திர நடிகர்தான் வில்லனாம்… லியோ நடிகருக்கும் முக்கிய ரோல் இருக்கிறதாம்…

- Advertisement -

நடிகர் தனுஷ் தற்போது இட்லி கடை திரைப்படத்தை இயக்கியிருக்கிறார். இதன் 90 சதவீத பணிகள் முடிவடைந்து விட்டன. அருண் விஜய் வில்லனாக நடிக்க நித்யா மேனன், ராஜ்கிரண் உள்ளிட்டோரும் இடம்பெற்று இருக்கிறார்கள். ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். தேனி மற்றும் மதுரை மாவட்டங்களை சுற்றி இந்த திரைப்படம் படமாக்கப்பட்டுள்ளது.

எஞ்சிய 10 சதவீத பணிகள் இன்னும் கிடப்பில் உள்ளன. இதற்காக வெளிநாட்டில் சென்று படமாக்க தனுஷ் திட்டமிட்டு இருக்கிறார். ஆனால் அனைவரது கால்ஷீட் கிடைக்க வேண்டும் என்பதால், அதற்கான பணிகள் தள்ளிப் போய் உள்ளன. இதனால் அறிவிக்கவே அறிவித்தபடி அந்த திரைப்படம் ஏப்ரல் பத்தாம் தேதி வெளியாகாது என்று தெரியவந்துள்ளது.

- Advertisement -

இது இப்படி இருக்க தற்போது ஹிந்தி திரைப்படத்தில் தனுஷ் கவனம் செலுத்தி வருகிறார். ஆனந்த் எல் ராய் இயக்கும் அந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு, டெல்லியில் நடைபெற்று வருகிறது. இதுபோக தனுஷ் நடித்திருக்கும், குபேரா திரைப்படமும் ரிலீஸ்க்கு தயாராக உள்ளது.

ஒரு பெரும் தொகையை மையப்படுத்தியே இந்த திரைப்படத்தின் கதை எழுதப்பட்டுள்ளதாம். பிச்சைக்காரன் கெட்டப்பில் தனுஷ் வர, நாகர்ஜுனா ராஸ்மிகா மந்தனா உள்ளிட்டோருக்கும் முக்கிய கதாபாத்திரம் கொடுக்கப்பட்டிருக்கிறது. இதனை இயக்கி இருக்கும் சேகர் கமுலா, நிச்சயம் குபேரா திரைப்படம் வித்தியாசமான அனுபவத்தை கொடுக்கும் என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -

இந்த நிலையில் இந்தி திரைப்படத்தை முடித்துவிட்டு அடுத்தடுத்த திரைப்படங்களில் நடிப்பதற்கு கமிட்டாகி இருக்கிறார் தனுஷ். மிக முக்கியமாக அமரன் திரைப்படத்தை எடுத்த ராஜ்குமார் பெரியசாமி, போர் தொழில் திரைப்படத்தை எடுத்த விக்னேஷ், லப்பர் பந்து படத்தை இயக்கிய தமிழரசன் பச்சை முத்து ஆகியோருடன் களம் காண்கிறார் தனுஷ்.

இதில் முதலில் அவர் நடிக்கப் போவது போர் தொழில் இயக்குனர் விக்னேஷ் படத்தில்தான். இதனை ஐசரி கணேஷ் தயாரிப்பதாக கூறப்படுகிறது. படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் ஜெயராம் நடிப்பதாக தகவல் கசிந்துள்ளது. அதுபோக மிக முக்கியமான கதாபாத்திரத்தில் ஆக்சன் கிங் அர்ஜுன் வருகிறாராம். ஏற்கனவே விஜய்யுடன் லியோ மற்றும் அஜித்துடன் விடாமுயற்சி திரைப்படத்தில் நடித்த அர்ஜுன் தற்போது தனுஷ் உடனும் கைகோர்த்து இருப்பது எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

- Advertisement -

சற்று முன்