- Advertisement -
Homeபொழுதுபோக்குடைட்டில் வந்து 300 நாளாச்சு, விடாமுயற்சி அப்டேட் என்னாச்சு? ரசிகர்களின் கேள்விக்கு ப்ளு சட்டை மாறன்...

டைட்டில் வந்து 300 நாளாச்சு, விடாமுயற்சி அப்டேட் என்னாச்சு? ரசிகர்களின் கேள்விக்கு ப்ளு சட்டை மாறன் சொன்ன பதில் – கவுண்டமணியை மிஞ்சிட்டாரே

- Advertisement -

நடிகர் அஜீத்குமார் நடித்த துணிவு படம், கடந்த ஆண்டில் பொங்கல் பண்டிகையின்போது வெளியானது. அப்போது விஜய் நடித்த வாரிசு படமும் வெளியானது. இரண்டு படங்களுமே வசூலில் பெரிய அளவில் சாதனை புரிந்தது. வாரிசு படத்துக்கு பிறகு விஜய் நடித்த லியோ படம், கடந்த அக்டோபர் 19ம் தேதி வெளியானது.

ஆனால் அஜீத்குமார் நடித்த படம் எதுவும் அதன்பிறகு வெளியாகவில்லை. அவரது விடாமுயற்சி படப்பிடிப்பே, கடந்த அக்டோபர் மாதம் 4ம் தேதி துவங்கியது. அதே போல் அதே மாதத்தில் நடிகர் விஜய் நடிப்பில் வெங்கட்பிரபு இயக்கத்தில் கிரேட்டஸ்ட் ஆப் ஆல்டைம் படத்தின் ஷூட்டிங்கும் துவங்கியது.

- Advertisement -

இந்நிலையில் அடுத்த மாதம் மார்ச் 31 உடன், விஜய் படத்தின் ஷூட்டிங் நிறைவடைய உள்ளது. இந்த படத்தின் 90 சதவீத படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், ரஷ்யா நாட்டில் இறுதிகட்டப் படப்பிடிப்புகள் நடத்தப்படுகிறது. இதற்கான விஜய் படக்குழு விரைவில் ரஷ்யாவுக்கு புறப்பட்டுச் செல்கிறது.

ஆனால் விடாமுயற்சி படப்பிடிப்பு இன்னும் முடியவில்லை. படம் எந்த அளவுக்கு எடுக்கப்பட்டுள்ளது என்ற விவரங்களும் இல்லை. கடந்த நான்கைந்து வாரங்களுக்கு மேலாக, விடாமுயற்சி படப்பிடிப்பு அப்படியே நின்று போயுளளது. மீண்டும் ஷூட்டிங் எப்போது என்பது படத்தின் இயக்குநர் மகிழ் திருமேனிக்கே தெரியாது என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

- Advertisement -

ஆனால் அடிக்கடி அஜீத்குமார் பற்றிய தகவல்கள், மீடியாக்களில் வைரலானாலும் அது அவரை பற்றிய பர்சனல் விமர்சனங்களாக இருக்கிறதே தவிர, விடாமுயற்சி படம் குறித்த எந்த தகவலும் இல்லை. இதனால் நொந்து போன அஜீத் ரசிகர்கள், டைட்டில் வந்து 300 நாட்கள் ஆச்சு, விடாமுயற்சி அப்டேட் என்னாச்சு என, சமூக வலைதளங்களில் தொடர்ந்து கேட்டு வருகின்றனர்.

இப்படி கேள்வி கேட்ட ரசிகர்களின் பேனர் புகைப்படத்தை போட்டு, சினிமா விமர்சகர் ப்ளு சட்டை மாறன், தனது வலைதள பக்கத்தில் கவுண்டமணியை மிஞ்சும் அளவுக்கு ஒரு பதிலை போட்டுள்ளார். அது என்னவென்றால், இவனுங்க வேற, அடிக்கடி தமாசு பண்ணிக்கிட்டு, என பயங்கரமாக கிண்டலடித்துள்ளார். படப்பிடிப்பே நடக்காமல், மாதக்கணக்குல அப்படியே நிற்குது. இதுல அப்டேட், அப்டேட்ன்னு கேட்டு அஜீத் ரசிகர்கள் ஆர்வம் காட்டுவதை, ப்ளு சட்டை மாறன், இப்படி கலாய்த்திருப்பது வைரலாகி வருகிறது.

- Advertisement -

சற்று முன்