- Advertisement -
Homeபொழுதுபோக்குதிடீரென இயக்குனர் அவதாரம் எடுத்த டிராகன் பட நடிகர், படத்தின் ஹீரோவும் அவர்தானாம் - போட்றா...

திடீரென இயக்குனர் அவதாரம் எடுத்த டிராகன் பட நடிகர், படத்தின் ஹீரோவும் அவர்தானாம் – போட்றா வெடிய என குதூகலித்த ரசிகர்கள்!

- Advertisement -

முன்பெல்லாம் நடிப்பு திறமை இருந்தவர்கள் ஸ்டுடியோ ஸ்டுடியோவாக சென்று தயாரிப்பாளர்களை இயக்குனர்களை நேரில் சந்தித்து வாய்ப்பு கேட்டனர். ஒரு சிலர் தங்களது புகைப்படங்களை தயாரிப்பு நிறுவனங்களுக்கு நேரில் தந்து வாய்ப்பு இருந்தால் உங்கள் படத்தில் நடிக்க கூப்பிடுங்க ஒரு கோரிக்கை வைத்தனர்.

அப்படிப்பட்ட காலகட்டத்தில் நடிகர்கள் நடிகைகள் இயக்குனர்கள் தயாரிப்பாளர்களின் மகன்கள் மகள்கள் எளிதில் சினிமாவில் நாயகனாக, நாயகியாக நடிக்கும் வாய்ப்பை பெற்றனர். ஆனால் யாராக இருந்தாலும் தொடர்ந்து நல்ல கேரக்டர்களில் சிறப்பாக நடித்து வெற்றிப் படங்களை கொடுத்தால்தான் நீடித்து நிலைக்க முடியும் என்ற நிலையும் தமிழ் சினிமாவில் இருந்தது.

அதனால் வாரிசுகளாக சினிமாவில் காலடி பதித்த பலரும் காணாமல் போன நிலையில் திறமையானவர்கள் மட்டுமே ஜெயிக்க முடிந்தது. ஆனால் இப்போது அந்த நிலை மாறிவிட்டது. யூடியூப் பிரபலங்களும் ரீல்ஸ் போட்டு மக்கள் மத்தியில் கவனம் பெற்ற செலிபரட்டிகளும் மிக எளிதாக சினிமாவுக்குள் வந்துவிடுகின்றனர். அவர்களில் பலர் ஜெயித்தும் வருகின்றனர்.

இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நாயகனாக நடித்த படம் டிராகன். இந்த படத்தில் நாயகனின் நண்பர்களில் ஒருவராக விஜே சித்து நடித்திருந்தார். இவரது கேரக்டருக்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பு கிடைத்தது. விஜே சித்து யூடியூப் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர். டிவி சேனல்களிலும் சில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்தார்.

டிராகன் படத்தில் விஜே சித்துக்கு கிடைத்த வரவேற்பும் பாராட்டும் இப்போது அவரை திரைப்பட இயக்குனராக அவதாரம் எடுக்க வழி செய்திருக்கிறது. சினிமாவில் இயக்குனராக வேண்டும் என்ற கனவுடன் வந்த அவருக்கு அந்த வாய்ப்பை தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் வழங்கியிருக்கிறார். அவரது வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் தயாரிக்கும் ஒரு புதிய படத்தை விஜே சித்து டைரக்ட் செய்கிறார். அவரே அந்த படத்தில் கதாநாயகனாகவும் நடிக்கிறார்.

இந்த புதிய படத்தில் பிரமோ ஷூட்டிங் சமீபத்தில் நடந்தது. இதில் நடிகர் விஜே சித்து மற்றும் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் இருவரும் இணைந்து நடித்திருக்கின்றனர். இந்த புதிய படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வரும் ஏப்ரல் மாதம் வெளியாகிறது. மேலும் இந்த படத்தின் படப்பிடிப்பு வருகிற மே மாதம் துவங்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

சற்று முன்