- Advertisement -
Homeபொழுதுபோக்குஅஜீத்குமார் எப்படி நடிச்சிருக்கார், குட் பேட் அக்லி படம் எப்படி இருக்கும்? - இயக்குனர் ஆதிக்...

அஜீத்குமார் எப்படி நடிச்சிருக்கார், குட் பேட் அக்லி படம் எப்படி இருக்கும்? – இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் சொன்ன லேட்டஸ்ட் தகவல்!

- Advertisement -

முன்பெல்லாம் தீபாவளி பொங்கல் புத்தாண்டு விநாயகர் சதுர்த்தி போன்ற பண்டிகை நாட்களில் முக்கிய நடிகர்களின் படங்கள் ரிலீஸ் செய்யப்பட்டன. ஆனால் இப்போதெல்லாம் முன்னணி ஸ்டார் நடிகர்களின் படங்கள் ரிலீஸ் நாள்தான் விசேஷம் நிறைந்த பண்டிகை நாளாக ரசிகர்களுக்கு மாறி விடுகிறது.

அந்த வகையில் வருகிற ஏப்ரல் 10ம் தேதி நடிகர் அஜீத்குமார் திரிஷா நடிப்பில் வெளியாக உள்ள குட் பேட் அக்லி படத்தை வரவேற்க பண்டிகை நாளாக கொண்டாட அஜீத்குமார் ரசிகர்கள் இப்போதே தயாராகி விட்டனர். கடந்த மாதம் 6ம் தேதி வெளியான அஜீத்குமார் படம் விடாமுயற்சி போதிய வரவேற்பை பெறாத நிலையில் இந்த படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் பலத்த ஆர்வம் ஏற்பட்டுள்ளது.

- Advertisement -

நடிகர் அஜீத்குமார் நடித்துள்ள இந்த படத்தின் மீது ரசிகர்களுக்கு அதீத ஆர்வம் இருக்க காரணம், இந்த படத்தின் டீசர் பெரிய அளவில் ரீச் ஆகியிருக்கிறது. அஜீத்குமாரின் மிக தீவிரமான ரசிகரான ஆதிக் ரவிச்சந்திரன் காட்சிக்கு காட்சி அஜீத்குமாரை மாஸ் ஆக காட்டியிருப்பார் என்று ரசிகர்கள் நம்புகின்றனர். டீசரே பெரிய சம்பவமாக மாறி 24 மணி நேரத்தில் 32 மில்லியன் பார்வையாளர்களை கடந்திருக்கிறது.

மேலும் இந்த படத்தில் இருந்து ஓஜி சம்பவம் பாடல் வெளியாகி பெரிய வரவேற்பை பெற்ற நிலையில் நேற்று 2வது பாடல் காட் பிளஸ் யூ மாமே பாடலும் வெளியாகி பெரிய அளவில் வைரலாகி உள்ளது. ஜீவி பிரகாஷ்குமார் இசையில் இந்த பாடலை இசையமைப்பாளர் அனிருத் பாடியிருக்கிறார். ஜெயிலில் அஜீத்குமார் சக கைதிகளுடன் நடனம் ஆடுவது போல் இந்த பாடல் காட்சி அமைக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற குட் பேட் அக்லி படத்தின் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரனிடம் குட்பேட் அக்லி படம் குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் கூறியதாவது, அஜீத் சார் பண்ணாத கேரக்டர் கிடையாது. எல்லாமே அவர் பண்ணிட்டார். நாம ஒண்ணும் புதுசா அவரை பண்ண வைக்கப் போறது இல்லை.

இந்த காலகட்டத்துக்கு இந்த கேரக்டர் இருந்தா எப்படி பிஹேவ் பண்ணுமோ அதை தான் எடுத்து பிரசன்ட் பண்ண ட்ரை பண்ணி இருக்கோம். அதில் அஜீத் சார் அவரது முழுமையான நடிப்பை தந்திருக்கிறார். ஏப்ரல் 10ம் தேதி உங்களுக்கு நிறைய சர்ப்ரைஸ் திரையில் இருக்கும் என்று ஆதிக் ரவிச்சந்திரன் கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்